முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

BJP | சீன மொழியில் முதல்வர் முக.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த தமிழக பாஜக..!!

02:54 PM Mar 01, 2024 IST | 1newsnationuser6
Advertisement

சீன ராக்கெட் உடன் திமுக அமைச்சர் விளம்பரம் வெளியிட்டதை கிண்டல் செய்யும் வகையில், முதல்வர் ஸ்டாலினுக்கு சீன மொழியில் தமிழக பா.ஜ.க. பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளது.

Advertisement

கடந்த பிப்.28ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்காக பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இது தொடர்பாக திமுக அமைச்சரான அனிதா ராதாகிருஷ்ணன் பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிட்டிருந்தார். அதில், பிரதமர் மோடி மற்றும் முதல்வர் ஸ்டாலினின் பின்னணியில் சீன நாட்டின் கொடி பொறிக்கப்பட்ட ராக்கெட் படம் இடம்பெற்றிருந்தது. இது பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தது.

இதையடுத்து பிரதமர் மோடி, நெல்லையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், இதனை குறிப்பிட்டு திமுகவின் தேசப்பற்று இதுதான் என கடுமையாக விமர்சித்திருந்தார். இந்நிலையில், இன்று பிறந்தநாள் கொண்டாடும் முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலினுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் தமிழக பாஜக தரப்பில் முதல்வர் ஸ்டாலினுக்கு சீனாவின் ஆட்சி மொழியான மாண்டரின் மொழியில் வாழ்த்து தெரிவித்து கிண்டலாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். அதில், தங்களின் விருப்பமான மொழியில் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவிப்பதாகவும், அவர் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழட்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

Read More : TVK Vijay | ’விரும்பிய துறைகளில் உச்சம் தொட வாழ்த்துகள்’..!! 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விஜய் வாழ்த்து..!!

Advertisement
Next Article