முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

அயோத்தியில் பாஜக பின்னடைவு! ஆடிப்போன மோடி! தற்போதைய நிலவரம் என்ன?

english summary
12:23 PM Jun 04, 2024 IST | Mari Thangam
Advertisement

ராமர் கோயில் அமைந்துள்ள ஃபைசாபாத் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் லல்லு சிங் பின்னடைவை சந்தித்துள்ளார்.

Advertisement

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும் நிலையில், தற்போதைய நிலவரப்படி பாஜக கூட்டணி 235; இண்டியா கூட்டணி 149 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இத்தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், இண்டியா கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

தபால் வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி பரவலாக பாஜக முன்னணி வகிக்கிறது. இது இண்டியா கூட்டணிக்கு ஆரம்பகட்ட சறுக்கலாக அமைந்துள்ளது. இந்நிலையில், 80 மக்களவைத் தொகுதிகளை கொண்ட உத்தரப்பிரதேசத்தின் முன்னிலை விவரங்கள் வெளியாகி வருகின்றன.

அதன்படி, உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 35 தொகுதிகளிலும், காங்கிரஸ், சமாஜ்வாதி ஆகிய கட்சிகளை உள்ளடக்கிய இண்டியா கூட்டணி 42 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது. உ.பி.யில் இண்டியாவின் முக்கிய கட்சியான சமாஜ்வாதி 35, காங்கிரஸ் 6 மற்றும் திரிணமூல் காங்கிரஸ் ஒரு தொகுதியில் முன்னணியாக உள்ளன. என்டிஏவில் பாஜக 34, அப்னா தளம் 1-ல் முன்னணி வகிக்கின்றன. ராமர் கோயில் அமைந்துள்ள ஃபைசாபாத் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் லல்லு சிங் பின்னடைவை சந்தித்துள்ளார்.

இண்டியாவில் முக்கிய தொகுதிகளில் காங்கிரஸ் ரேபரேலியில் ராகுல் காந்தியும், அமேதியில் கிஷோரி லால் சர்மாவும் முன்னணி வகிக்கின்றனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாஜகவின் வேட்பாளரான மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.சமாஜ்வாதியின் தலைவர் அகிலேஷ் சிங் யாதவ் கன்னோஜிலும், அவரது மனைவியாக டிம்பிள் சிங் யாதவ் மெயின்புரியிலும் முன்னணி வகிக்கின்றனர். சுல்தான்பூரின் பாஜக எம்பியான முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்திக்கும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இவரை எதிர்த்து சமாஜ்வாதிக்காகப் போட்டியிடும் ராம்புவால் நிஷாத் முன்னேறி வகிக்கிறார்

Tags :
ayodhyaBJPCONGRESSElection 2024indiaLok Sabha Election Results 2024Lok Sabha ResultsndaPM Modiuttar pradesh
Advertisement
Next Article