For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

BJP | வாரணாசியில் பிரதமர் மோடி, காந்தி நகரில் அமித்ஷா போட்டி..? வெளியாகும் பாஜக வேட்பாளர்கள் பட்டியல்..!!

04:22 PM Mar 01, 2024 IST | 1newsnationuser6
bjp   வாரணாசியில் பிரதமர் மோடி  காந்தி நகரில் அமித்ஷா போட்டி    வெளியாகும் பாஜக வேட்பாளர்கள் பட்டியல்
Advertisement

வரும் மக்களவை தேர்தலில் பிரதமர் மோடி வாரணாசியிலும், அமித் ஷா காந்தி நகரிலும், ராஜ்நாத் சிங் லக்னோவிலும், ஸ்மிருதி இரானி அமேதியிலும் போட்டியிடுவது குறித்து பாஜக உயர்மட்டக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மக்களவைத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில், 3-வது முறையாக மோடியை பிரதமராக்கும் எண்ணத்துடன் பாஜக தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இதற்காக தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. வரும் மக்களவைத் தேர்தல் 400-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்றும், பாஜக மட்டும் சுயேச்சையாக 370 இடங்களுக்கு மேல் வெற்றி பெற வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

கடந்த 2014, 2019 ஆகிய ஆண்டுகளில் பெற்ற வெற்றியை விட கூடுதல் வெற்றியை இந்த தேர்தலில் பெற வேண்டும் என்பதற்கான வியூகத்தை பாஜக மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், நேற்று நள்ளிரவு டெல்லியில் பாஜக உயர்மட்டக்குழுக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர்களின் முதல் பட்டியலை அறிவிப்பது தொடர்பாக நடைபெற்ற இக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்றதாக கூறப்படுகிறது.

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் வேட்பாளர் தேர்வு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும், சத்தீஸ்கர், ராஜஸ்தான், கேரளா, குஜராத், ஜார்க்கண்ட் மற்றும் உத்தாரகண்ட் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பாஜக தலைவர்களுடன் வேட்பாளர் பெயர்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது 550 வேட்பாளர்களுக்கான பட்டியல் குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், மறைந்த சுஷ்மா சுவராஜின் மகள் பன்சூரி ஸ்வராஜ், பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார், மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு மற்றும் நடிகர் ரவி கிஷன் ஆகியோர் மக்களவைத் தேர்தலில் வேட்பாளர்களாக பரிசீலிக்கப்பட்டனர்.

கட்சியின் முதல் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட கூட்டத்தில், கடந்த கால தேர்தல் முடிவுகள் மற்றும் வெற்றி தோல்வி குறித்து தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டது. பிரதமர் மோடி வாரணாசியிலும், அமித் ஷா காந்தி நகரிலும், ராஜ்நாத் சிங் லக்னோவிலும், ஸ்மிருதி இரானி அமேதியிலும் போட்டியிடுவது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளன.

Read More : BJP | சீன மொழியில் முதல்வர் முக.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த தமிழக பாஜக..!!

Advertisement