Rahul Gandhi | "பாஜகவிற்கு காங்கிரஸ் உதவி தேவை"… பரபரப்பை ஏற்படுத்திய ராகுல் காந்தி பேச்சு.!!
Rahul Gandhi: பாஜக தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு காங்கிரஸ் கட்சியின் உதவி தேவை என ராகுல் காந்தி பேசியிருக்கிறார்.
2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவுகள் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் தொடங்க இருக்கிறது. 7 கட்டங்களாக நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு ஜூன் 1-ஆம் தேதி முடிவடைகிறது. கேரளா மற்றும் கர்நாடகா உட்பட மாநிலங்களில் ஏப்ரல் 26 ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்கு பதிவுகள் நடைபெற உள்ளது.
நாடு முழுவதிலும் உள்ள வெவ்வேறு தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற இருப்பதால் இந்தியா முழுவதும் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்திருக்கிறது. அரசியல் கட்சித் தலைவர்கள் தங்கள் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நாடு முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகத்தின் பிரச்சாரம் மேற்கொண்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி(Rahul Gandhi) தற்போது கேரள மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய ராகுல் காந்தி பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு காங்கிரஸ் உதவி தேவைப்படுகிறது என பொதுமக்களிடம் தெரிவித்திருக்கிறார். இந்தப் பிரச்சாரத்தில் பேசிய அவர் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதியில் பெண்கள் நலன் வேலைவாய்ப்பு மற்றும் விவசாய நலன் குறித்த வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
மேலும் பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையில் நிலவிற்கு மனிதனை அனுப்புவதாக குறிப்பிட்டு இருக்கிறார்கள். அவர்கள் மனிதனை நிலவிற்கு அனுப்புவதற்கு இஸ்ரோ ராக்கெட்டை கண்டிப்பாக பயன்படுத்துவார்கள். ஆனால் இஸ்ரோவை நிறுவியது காங்கிரஸ். எனவே பாஜக தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்றாலும் அதற்கு காங்கிரஸ் உதவி தேவை என ராகுல் காந்தி பேசியிருக்கிறார். அவரது இந்த பேச்சு மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.