பாஜக தேசிய தலைவருக்கே ஆப்பு..!! பதவி பறிபோகிறது..!! ஜேபி நட்டாவுக்கு மாற்று இவரா..? வெளியாகிறது அறிவிப்பு..!!
பாஜக தேசிய தலைவர் பதவியில் இருந்து ஜேபி நட்டாவை மாற்றம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மக்களவைக்கான 18-வது தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், இந்தியாவில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கூட்டணி ஆட்சி அமையவுள்ளது. அதன்படி, தனிப்பெரும் கட்சியான பாஜக, சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ்குமாரின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளது. இந்த கூட்டணி ஆட்சியின் பிரதமராக, வரும் 8ஆம் தேதி நரேந்திர மோடி பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக இருந்த பாஜக ஆட்சிக்கும், இனி அமையப்போகும் பாஜக கூட்டணி ஆட்சிக்கும் பல வித்தியாசங்கள் இருக்கும் என சொல்லப்படுகிறது. குறிப்பாக, மோடியால் இனி தன்னிச்சையாக எந்தவொரு முக்கிய முடிவுகளையும் எடுக்க முடியாது எனவும் அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றன. கடந்த இரண்டு தேர்தல்களிலும் பாஜக தனிப்பெரும்பான்மையை பெற்றதால், கூட்டணி கட்சிகளை நாட வேண்டிய சூழல் ஏற்படவில்லை. இதனால், பணமதிப்பிழப்பு, கொரோனா ஊரடங்கு, ஜிஎஸ்டி மற்றும் நீட் தேர்வு போன்ற பல முக்கிய முடிவுகளை தன்னிச்சையாகவே செயல்படுத்தியது.
இந்நிலையில், பாஜக தேசிய தலைவர் பதவியில் இருந்து ஜேபி நட்டாவை மாற்றம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தலில் பாஜகவில் அதிக அளவில் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மத்தியப்பிரதேச முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகானை அடுத்த பாஜக தலைவராக நியமிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.