முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

BJP: நான் போட்டியிட போவதில்லை என உ.பி‌ தொகுதி பாஜக எம்.பி‌ அறிவிப்பு...! என்ன காரணம்...?

06:10 AM Mar 05, 2024 IST | 1newsnationuser2
Advertisement

உ.பி பராபங்கி தொகுதி பா.ஜ.க எம்.பி உபேந்திர சிங் ரவாத் தான் போட்டியிட போவதில்லையென அறிவித்துள்ளார்.

Advertisement

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார் அக்கட்சிட்யின் பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே. வரும் மக்களவைத் தேர்தலில் ஒன்றிய அமைச்சர்கள் மற்றும் இணை அமைச்சர்கள் 34 பேர் மீண்டும் போட்டியிடுகின்றனர். 80 தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேச மாநிலத்தில் 51 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர்களை அறிவித்துள்ளது பாஜக. பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார்.

அதே போல பாஜக முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் திரை நட்சத்திரங்களுக்கு கணிசமான இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. ஹேமமாலினி, கேரள நடிகர் சுரேஷ் கோபி, ஹிந்தி நடிகர் ரவி கிஷன் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேசம் முன்னாள் முதல்வர் சிவ்ராஜ்சிங் சவுகான் - விதீஷா தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கேரளாவின் பத்தனம்திட்டா தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் ஏகே ஆண்டனியின் மகன் அணில் ஆண்டனிக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளது பாஜக. இந்த நிலையில் உ.பி பராபங்கி தொகுதி பா.ஜ.க எம்.பி உபேந்திர சிங் ரவாத் தான் போட்டியிட போவதில்லையென அறிவித்துள்ளார்.

உ.பி பராபங்கி தொகுதி பா.ஜ.க எம்.பி உபேந்திர சிங் ரவாத், அதே தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தான் போட்டியிடப்போவதில்லை என அறிவித்துள்ளார். உபேந்திர சிங் ராவத் இருக்கும் ஆபாச வீடியோ சமீபத்தில் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவர் இவ்வாறு அறிவித்திருக்கிறார். நேற்று மேற்கு வங்கத்தை சேர்ந்த வேட்பாளர் ஒருவர் விலகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Next Article