For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

கோடி ரூபாய்க்கு மரங்கள் கடத்தி விற்பனை.! வசமாக சிக்கிய பாஜக எம்பி-யின் சகோதரர்.! அதிர்ச்சி ரிப்போர்ட் .!

12:15 PM Dec 31, 2023 IST | 1newsnationuser4
கோடி ரூபாய்க்கு மரங்கள் கடத்தி விற்பனை   வசமாக சிக்கிய பாஜக எம்பி யின் சகோதரர்   அதிர்ச்சி ரிப்போர்ட்
Advertisement

கர்நாடக மாநிலத்தின் வனப்பகுதியில் இருந்து பழமையான மரங்களை கடத்தி விற்பனை செய்த வழக்கில் பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த எம்பி-யின் சகோதரர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக வனத்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

கர்நாடக மாநிலத்தின் ஹாசன் மாவட்டத்திலுள்ள அரசுக்கு சொந்தமான இடத்திலிருந்து பழமை வாய்ந்த மரங்கள் வெட்டி கடத்தப்படுவதாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற வருவாய் துறை அதிகாரிகள் சோதனை நடத்திய போது 12 ஏக்கர் நிலப்பரப்பிலிருந்த 126 மரங்கள் வெட்டி விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்தது. இவற்றின் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பெங்களூரு குற்றவியல் காவல்துறையிடம் புகாரளித்தனர். இந்த புகாரைத் தொடர்ந்து மரங்களை கடத்தி விற்பனை செய்ததாக பாரதிய ஜனதா கட்சியின் கர்நாடக மாநில எம்பி பிரதாப் சிம்ஹாவின் தம்பி விக்ரம் சிம்ஹா கைது செய்யப்பட்டார். மேலும் இந்த வழக்கு வனத்துறைக்கு மாற்றப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக வனத்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தினார்.

அவர்களது விசாரணையின் முடிவில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள மரங்களை பாஜக எம்பி-யின் சகோதரர் கடத்தி விற்பனை செய்தது உறுதி செய்யப்பட்டது. வன பாதுகாப்பு விதிகளை மீறியதாகவும் வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியில் இருந்து மரங்களை கடத்தி விற்பனை செய்ததாகவும் இவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. மத்தியில் ஆளும் கட்சியைச் சார்ந்த எம்பி-யின் சகோதரர் மரக்கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags :
Advertisement