For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பாஜக எம்.எல்.ஏ வானதி ஸ்ரீனிவாசன்... முதலமைச்சர் ஸ்டாலின் சந்திப்பு...! பின்னணி என்ன...?

BJP MLA Vanathi Srinivasan... Meets Chief Minister Stalin...! What is the background?
05:55 AM Aug 21, 2024 IST | Vignesh
பாஜக எம் எல் ஏ வானதி ஸ்ரீனிவாசன்    முதலமைச்சர் ஸ்டாலின் சந்திப்பு     பின்னணி என்ன
Advertisement

கோவை விமான நிலைய விரிவாக்க திட்டத்துக்கு நிலங்களை வழங்க முடிவு செய்ததற்கு பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் நன்றி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது அறிக்கையில்; சென்னையில் முதல்வர் ஸ்டாலினை கட்சி நிர்வாகிகள் பேராசிரியர் கனகசபாபதி, சுமதி வெங்கட் ஆகியோருடன் சந்தித்து பேசினேன். அப்போது கோவை மக்களின் தேவைகளை நிறைவேற்றகோரி மனு அளித்தேன். கோவை விமான நிலைய விரிவாக்க திட்டத்துக்கு நிலங்களை நிபந்தனையின்றி வழங்க வேண்டும், மெட்ரோ ரயில் திட்ட பணிகளை வேகப்படுத்த வேண்டும், நகர்புற வளர்ச்சி ஆணையம் அறிவிக்கப்பட்டும் செயல்படுத்தப்படாமல் உள்ளது. அதை செயல்படுத்த வேண்டும்.

Advertisement

காந்திபுரம், டவுன்ஹால், ராஜவீதி பகுதிகளில் பல்லடுக்கு வாகன நிறுத்தகம் அமைக்க வேண்டும். என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன. கோவை விமான நிலைய விரிவாக்க திட்டத்துக்கு நிலங்களை நிபந்தனையின்றி மத்திய அரசுக்கு வழங்கும் தமிழக முதல்வரின் முடிவுக்கு நன்றி தெரிவித்தேன் என தெரிவித்துள்ளார்.

கோவை முன்னாள் எம்.பி கருத்து

சர்வதேச விமானங்கள் கூடுதலாக இயக்க விரிவாக்க திட்டத்தை செயல்படுத்த நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகிறோம். முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு ரூ. 2,100 கோடி ஒதுக்கீடு செய்த நிலத்தை ஆர்ஜிதம் செய்துள்ளது. அவற்றை தனியாருக்கு ஒப்படைக்க கூடாது என நிபந்தனை விதித்துள்ளது. திமுக அரசு ஏற்கெனவே எடுத்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும் என கோவை முன்னாள் எம்.பி கருத்து தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement