15 வயது சிறுமி கற்பழிப்பு.! போக்சோவில் கைது செய்யப்பட்ட பாஜக எம்எல்ஏ.! விரைவில் தீர்ப்பு.! பரபரப்பு தகவல்கள்.!
உத்திரபிரதேச மாநிலத்தில் 15 வயது சிறுமியை கற்பழிக்கப்பட்ட வழக்கு தொடர்பாக அந்த மாநில எம்எல்ஏ கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த வழக்கில் வெள்ளிக்கிழமை தீர்ப்பு வெளியாகும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
உத்தரப் பிரதேசம் மாநிலம் துத்தி சட்டமன்ற தொகுதியின் எம்எல்ஏ-வாக இருப்பவர் ராம் துலார். இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு 15 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையின் நடவடிக்கை எடுத்திருந்தது.
சம்பவம் நடைபெற்ற காலத்தில் அந்த கிராமத்தில் தலைவியாக ராம் துலாரின் மனைவி இருந்ததால் இந்த சம்பவத்தில் நியாயமான விசாரணை நடைபெறவில்லை என்ற குற்றச்சாட்டும் நிலவி வந்தது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த காவல்துறையினர் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இது தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் ராம் துலார் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் நிரூபணமாகி இருக்கிறது. இதனையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார் இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு வருகின்ற வெள்ளிக்கிழமை வெளியாகும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். பாரதிய ஜனதா கட்சியின் எம்எல்ஏ கற்பழிப்பு வழக்கில் குற்றவாளியாக இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.