PMO Modi | பிரதமர் மோடி பேச்சுக்கு அதிருப்தி.!! பாஜக சிறுபான்மை அணி தலைவர் அதிரடி நீக்கம்.!!
PMO Modi: 2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்கு பதிவு நாளை மறுநாள் நடைபெற இருக்கிறது. 18-வது பாராளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக இந்தியாவில் நடைபெற்று வருகிறது. தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி உட்பட 102 பாராளுமன்ற தொகுதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்றது.
இந்நிலையில் கேரளா கர்நாடக மற்றும் ராஜஸ்தான் உட்பட 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 பாராளுமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு வருகின்ற 26 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவிற்கான நாட்கள் நெருங்கி வருவதை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டது.
இந்த பரப்புரையின் போது ராஜஸ்தான் மாநிலத்தில் பேசிய பிரதமர் மோடி(PMO Modi) இஸ்லாமியர்கள் அதிகம் குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள். இந்துக்களின் சொத்துக்களையும் காங்கிரஸ் இஸ்லாமியர்களுக்கு வழங்குகிறது என குற்றம் சாட்டியிருந்தார். இது இஸ்லாமிய மக்கள் மத்தியில் மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. பிரதமர் மோடியின் இந்த கருத்திற்கு ராஜஸ்தான் மாநில பாஜக சிறுபான்மை அணி தலைவர் உஸ்மான் கனி அதிருப்தி தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து அவரை கட்சியிலிருந்து நீக்குவதாக பாஜக அறிவித்துள்ளது. மோடியின் பேச்சு குறித்து கருத்து தெரிவித்த உஸ்மான் கனி பிரதமர் மோடியின் பேச்சால் மூன்று முதல் நான்கு தொகுதிகளில் பாஜக தோல்வியடையும் என தெரிவித்திருக்கிறார். மேலும் வாக்கு சேகரிக்கச் செல்லும் போது பிரதமர் மோடியின் பேச்சு குறித்து மக்கள் கேள்வி எழுப்புவதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவரை பாஜக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கி இருக்கிறது.