Lok Sabha 2024| பாஜக-வில் இருந்து விலகிய மாநிலங்களவை எம்பி.! வேட்பாளர் தேர்வு குறித்து பகிரங்க குற்றச்சாட்டு.!!
2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது. மக்களவைத் தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிவடைந்து தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் எனவும் தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.
பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக அரசியல் கட்சிகள் தேர்தல் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு உள்ளிட்டவற்றில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 2024 ஆம் வருட பொது தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலை 2 கட்டங்களாக அறிவித்திருக்கிறது.
தேர்தல் நாள் நெருங்கி வரும் நிலையில் கட்சி நிர்வாகிகள் ஒரு கட்சியிலிருந்து மற்றொரு கட்சிக்கு தாவூதும் அதிகரித்திருக்கிறது. சமீப காலமாக காங்கிரஸின் மூத்த தலைவர்கள் அந்தக் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தது தொடர்ந்து வந்த நிலையில் தற்போது பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் அந்தக் கட்சியிலிருந்து விலகி இருக்கும் நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.
மத்திய பிரதேசம் மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினரான அர்ஜுன் பிரதாப் சிங் அந்தக் கட்சியிலிருந்து விளக்குவதாக திடீரென அறிவித்திருக்கிறார். அவர் பாரதிய ஜனதா கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகியதாக அறிவித்திருக்கிறார். நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் அவருக்கு போட்டியிட வாய்ப்பு கொடுக்காததால் கட்சியிலிருந்து விலகியதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் பாரதிய ஜனதா கட்சியின் பாராளுமன்ற வேட்பாளர்கள் தேர்வு குறித்து பகிரங்க குற்றச்சாட்டுகளை முன் வைத்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.