தமிழக பாஜக: முக்கிய தலைவர்கள் முடிவால் கலக்கத்தில் தொண்டர்கள்.! வெளியான அதிர்ச்சி காரணம்.!
2024 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்தத் தேர்தலில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வடமாநிலங்களில் அசுர பலத்துடன் இருக்கிறது. எனினும் தென் மாநிலங்களில் அந்த கட்சியின் நிலைமை சொல்லிக் கொள்ளும் படியாக இல்லை. தமிழ்நாடு கேரளா போன்ற மாநிலங்களில் தொடர் தோல்விகளை சந்தித்து வந்த பாஜக தற்போது தெலுங்கானா ஆந்திரா மற்றும் கர்நாடகாவிலும் தோல்வியை சந்தித்திருக்கிறது.
இந்தத் தேர்தலில் அந்த நிலைமையை மாற்றி விடும் முயற்சியில் பாஜக ஈடுபட்டு வந்தது. மேலும் தமிழகத்தில் பாஜக நன்றாக வளர்ந்து விட்டது எனக் கூறிய அண்ணாமலை இந்த வருட பாராளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் வெற்றியை காணலாம் என தெரிவித்திருந்தார். மேலும் தமிழக பாஜகவின் முக்கிய தலைவர்களான அண்ணாமலை மற்றும் எல்.முருகன் ஆகியோர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் மத்திய அமைச்சரான முருகன் மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து மீண்டும் ராஜ்ய சபா எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார். இதனால் அவர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டார் என்பது உறுதியாக இருக்கிறது. மேலும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவை தொகுதியில் பாராளுமன்ற தேர்தலில் களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் தேர்தல் அரசியலில் தனக்கு ஈடுபாடு இல்லை எனக் கூறிய அண்ணாமலை கட்சியின் தலைமை பதவியை நிர்வகிப்பதற்கே நேரம் சரியாக இருக்கிறது என தெரிவித்தார்.
இதுபோன்ற கட்சியின் முக்கியமான தலைவர்கள் தேர்தல் களத்தில் இருந்து ஒதுங்குவது பாஜக தொண்டர்களை சோறு உடைய செய்திருக்கிறது. மூத்த தலைவர்கள் பலரும் ஆளுநராக பதவி உயர்வு பெற்ற நிலையில் எச்.ராஜா போன்றோர் தேர்தலில் போட்டியிடுவதாக தெரியவில்லை. பாஜக தொண்டர்கள் அண்ணாமலை மற்றும் முருகன் தேர்தலில் போட்டியிடுவார்கள் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர்களின் இந்த முடிவு ஏமாற்றமாக அமைந்திருக்கிறது. இதனால் கட்சியைச் சார்ந்த தொண்டர்கள் பலரும் புலம்பி வருகின்றனர்.
இவர்களது இந்த பின் வாங்கலுக்கு உளவுத்துறையின் அறிக்கை ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. மதிய உணவு துறையின் அறிக்கையை தொடர்ந்து எல்.முருகன் மற்றும் அண்ணாமலை ஆகியோர் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து பின் வாங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.