For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

வீடியோ: BJP தலைவரின் மருமகன் கொலை வழக்கு.!! வெளியான சிசிடிவி ஆதாரம்.!! தீவிர தேடுதல் வேட்டையில் காவல்துறை.!!

04:51 PM Apr 10, 2024 IST | Mohisha
வீடியோ  bjp தலைவரின் மருமகன் கொலை வழக்கு    வெளியான சிசிடிவி ஆதாரம்    தீவிர தேடுதல் வேட்டையில் காவல்துறை
Advertisement

BJP: உத்திர பிரதேச மாநிலத்தின் சுல்தான்பூர் நகரில் பாஜக தலைவரின் மருமகன் சுட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியமான சிசிடிவி ஆதாரம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. உத்திர பிரதேச மாநிலம் சுல்தான்பூர் பகுதியைச் சேர்ந்தவர் விஜய் நாராயன் சிங். பாஜக(BJP) தலைவரின் மருமகனான இவரும் அனுஜ் சர்மா என்பவரும் ஏப்ரல் 7-ஆம் தேதி மர்ம நபர்களால் சுடப்பட்டனர்.

Advertisement

விஜய் நாராயன் சிங் கடந்த செப்டம்பர் 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற மருத்துவர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது. உத்திரபிரதேசம் மாநிலம் சுல்தான்பூர் அருகே உள்ள தரியாபூர் என்ற இடத்தில் மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறு விஜய் நாராயன் சிங் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக வெளியான சிசிடிவி காட்சிகள் காவல்துறையினருக்கு முக்கிய ஆதாரம் ஆக அமைந்திருக்கிறது.

முதலில் ஒரு நபர் விஜய் நாராயன் சிங்கை சுட்டு கொலை செய்தார் என்று காவல்துறையினர் தெரிவித்த நிலையில் தற்போது இரண்டு நபர்கள் அவரை சுட்டு கொலை செய்துவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச்செல்லும் காட்சிகள் பதிவாகி இருக்கிறது. அஜய் என்ற நபர் விஜய் நாராயன் சிங்குடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை துப்பாக்கியால் சுட முயலும் போது அனுஜ் சர்மா விஜய் நாராயன் சிங்கை காப்பாற்ற முற்பட்டிருக்கிறார்.

இந்த தாக்குதலில் அனுஜ் சர்மாவும் படுகாயம் அடைந்துள்ளார். இந்த தாக்குதலைத் தொடர்ந்து விஜய் நாராயணன் சிங் மற்றும் அனுஜ் சர்மா இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் விஜய் நாராயணன் சிங் மரணம் அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக அஜய் என்ற நபரை காவல்துறை தீவிரமாக தேடி வருகிறது. மேலும் அவருடன் இணைந்து இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபரையும் காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர்.

Read More:கால்களில் கூச்ச உணர்வா..? கடுமையான வலியா..? கல்லீரலுக்கு ஆபத்து..!! உடனே மருத்துவரை பாருங்க..!!

Tags :
Advertisement