கேமராவுக்காக போலி ரத்ததானம் செய்த பாஜக தலைவர்..!! லீக் ஆன வீடியோ.. வச்சு செய்யும் நெட்டிசன்கள்!!
பாஜக தலைவரும், உத்தரபிரதேசத்தின் மொராதாபாத் மேயருமான வினோத் அகர்வால், பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி கேமராவுக்காக ரத்த தானம் செய்வது போல் போலியாக நடித்த வீடியோ இணையத்தில் வைரலாகிறது. தேசிய தன்னார்வ இரத்த தான தினத்துடன் இணைந்து பிரதமர் மோடியின் பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் செப்டம்பர் 17 அன்று இரத்த தான இயக்கம் ஏற்பாடு செய்யப்பட்டது.
சமூக ஊடகங்களில் பரவும் வீடியோவில், வினோத் அகர்வால் ஒரு இரத்த தான முகாமில் படுக்கையில் படுத்துக் கொண்டு அவரது இரத்த அழுத்தத்தை துணை மருத்துவர் பரிசோதிக்கிறார். அந்த மருத்துவர் ஊசியை செலுத்தாமல் வீடியோவிற்காக போஸ் கொடுத்ததும், வீடியோ எடுத்து முடித்த உடன் சிரித்துக்கொண்டே பாஜக தலைவர் படுக்கையில் இருந்து எழுந்து அறையை விட்டு வெளியேறுவதும் பதிவாகியுள்ளது.
வீடியோ வெளியான உடனேயே, சமூக ஊடக பயனர்கள் அகர்வாலின் செயலை கண்டித்தும், அதே வேளையில் விளம்பரம் பெறுவதற்கான அவமானகரமான முயற்சி என்றும் கடுமையான கண்டனங்களை வெளிப்படுத்தி வருகின்றனர். வைரலான வீடியோவுக்கு பதிலளிக்கும் விதமாக, பாஜக தலைவர் இது தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் தனது போட்டியாளர்களின் சதி என்று முத்திரை குத்தினார். அகர்வால் இரத்தம் வழங்குவதற்காக முகாமுக்குச் சென்றதாகக் கூறினார், ஆனால் அவர் நீரிழிவு நோயாளி என்று மருத்துவர் அறிந்ததும், அவர் தானம் செய்யத் தகுதியற்றவர் என்று கூறினார்.
Read more ; வைத்திலிங்கம் மீது வழக்கு போடப்பட்டது ஏன்…? திமுக மீது OPS பரபரப்பு குற்றச்சாட்டு…!