முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

BREAKING | உச்சகட்ட பரபரப்பு.! "அண்ணாமலைக்கு டெல்லி மேலிடம் போட்ட ஆர்டர்.." தயாராகும் தமிழக பாஜக.!

12:37 PM Jan 21, 2024 IST | 1newsnationuser7
Advertisement

2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தல் வருகின்ற மே மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது . இதற்கான ஆயத்தப் பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மார்ச் மாதம் இரண்டாவது வாரத்திற்குள் பாராளுமன்றத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி இடையே முக்கிய போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

வடமாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி மற்றும் அதன் கூட்டணிகள் வலு பெற்றிருக்கும் நிலையில் தென் மாநிலங்களில் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு அலை இருப்பதாக தெரிகிறது. எனினும் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணியே வெற்றி பெற்றுள்ளது. இது பாராளுமன்ற தேர்தலில் அவர்களுக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் தேதி நெருங்கி வருவதை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.

ஆளும் பாரதிய ஜனதா கட்சி டெல்லியில் 2024 ஆம் வருட தேர்தலுக்கான முதல் பிரச்சாரத்தை கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. அந்தக் கட்சியின் தேசிய தலைவர் நட்டா சுவர் விளம்பர பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார். இந்நிலையில் உத்தேச வேட்பாளர்கள் பட்டியலை தயார் செய்யும் பணியை தொடங்கி இருக்கிறது பாரதிய ஜனதா கட்சி. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் உத்தேச வேட்பாளர்கள் பட்டியலை தயார் செய்யும் படி மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

நாடாளுமன்றத் தேர்தலில் தொகுதிக்கு 3 பேர் வீதம் உத்தேச வேட்பாளர்களின் பட்டியலை தயார் செய்து அனுப்பும்படி டெல்லி மேலிடம் அண்ணாமலைக்கு உத்தரவிட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து உத்தேச வேட்பாளர்களின் பட்டியல் தயார் செய்யும் பணிகள் தொடங்கும் என தமிழக பாரதிய ஜனதா கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்ற தேர்தலுக்கு 4 மாதங்களே உள்ள நிலையில் கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட துவங்கி உள்ளன.

Tags :
annamalaiBJPIntended CandidatesJP Nattatn politics
Advertisement
Next Article