முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

தேர்தல் விதிகளை மீறிய பாஜக..!! என்ன இப்படி பண்ணிட்டாங்க..!! திமுக பரபரப்பு புகார்..!!

04:38 PM Mar 26, 2024 IST | Chella
Advertisement

இணையதளத்தில் விளம்பரம் வெளியிட்டு பரிசு அறிவித்துள்ள பாஜக மீது நடவடிக்கை கோரி இந்திய தேர்தல் ஆணையத்துக்கு திமுக புகார் கடிதம் எழுதியுள்ளது. திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு புகார் கடிதம் எழுதியுள்ளார். அந்த புகாரில், ‘போல் சர்வே.டாப்’ என்ற இணையதளத்தில் பாஜ விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதற்கு, பாஜக தேர்தல் போனஸ் என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

அந்த விளம்பரத்தில் உள்ள கேள்விகளுக்கு பதிலளித்தால் ரூ.5 ஆயிரம் பரிசளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விளம்பரம், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 123-ம் பிரிவின்படி குற்றமாகும். அதன்படி, எந்தவொரு வேட்பாளரோ அல்லது அவரது முகவரோ, யாருக்கும் பரிசுப் பொருளை அளித்தாலோ அல்லது அளிப்பதாக வாக்கு கொடுத்தாலோ அது லஞ்சமாக அமைகிறது. இதுபோன்ற குற்றத்தை அனைத்து கட்சிகள் மற்றும் வாக்காளர்கள் தவிர்க்க வேண்டும் என்று தேர்தல் நடத்தை விதியில் உள்ளது.

இது வேட்பாளர்களுக்கு மட்டுமல்லாமல் கட்சிகளுக்கும் பொருந்தும் என்பதால் இந்திய தேர்தல் ஆணையம் உடனே தலையிட்டு பாஜக மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டத்தின்படி, பாஜவுக்கு உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்” என்று அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நாளன்று ஊதியத்துடன் விடுமுறை..!! தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு அதிரடி..!!

Advertisement
Next Article