For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

"எடப்பாடி பழனிச்சாமி கொடுத்த லிஸ்ட்.." தூதுவரான ஜி.கே வாசன்..!! பாஜகவின் புதிய திட்டம்.!

04:03 PM Feb 04, 2024 IST | 1newsnationuser7
 எடப்பாடி பழனிச்சாமி கொடுத்த லிஸ்ட்    தூதுவரான ஜி கே வாசன்     பாஜகவின் புதிய திட்டம்
Advertisement

2019 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தல் மற்றும் 2021 ஆம் வருட சட்டமன்றத் தேர்தல்களில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்த அதிமுக இந்த முறை பிஜேபியுடன் கூட்டணியை முடித்திருக்கிறது. மேலும் வர இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் தமிழகத்தில் வலுவான கூட்டணியை அமைக்க முயற்சி செய்து வருகிறது.

Advertisement

தமிழகத்தில் அதிமுக கட்சியுடன் கூட்டணி முறிவு பாரதிய ஜனதா கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கடந்த முறை தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தங்களது பொதுக்குழு கூட்டத்திற்கு பிறகு கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளது. இந்நிலையில் அந்தக் கட்சியின் தலைவர் ஜி.கே வாசன் அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசி இருப்பது அரசியல் வட்டாரங்களில் முக்கிய நகர்வாக பார்க்கப்படுகிறது.

மேலும் பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அறிவுறுத்தலின் பேரில் ஜி.கே வாசன் எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு நிகழ்ந்ததாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி முடிவு குறித்து எடப்பாடி பழனிச்சாமி இடம் காரணம் கேட்கப்பட்டதாகவும் தெரிகிறது. இது குறித்த அறிக்கை ஒன்றையும் ஜி.கே வாசனிடம் எடப்பாடி பழனிச்சாமி அளித்ததாக தெரிகிறது. மேலும் தமிழகத்தில் பாஜக மற்றும் அதிமுக கூட்டணி முடிவிற்கு தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை தான் முக்கிய காரணம் என்ற பேச்சும் அரசியல் வட்டாரங்களில் அடிபட்டு வருகிறது.

அதிமுக தலைவர்களை அண்ணாமலை தரக்குறைவாக பேசி வந்ததால் தான் அதிமுக பிஜேபி கூட்டணி முடிந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் பாராளுமன்றத் தேர்தலின் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை செய்வதற்காக அக்கட்சியின் பொதுச் செயலாளர் பி.எல் சந்தோஷ் தமிழகம் வருகிறார். கோவையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் தொகுதி பங்கீடு மற்றும் கூட்டணி குறித்து விவாதிக்க இருக்கிறார். இந்தக் கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி கொடுத்த அறிக்கை தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இது தொடர்பாக அந்த கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் எனவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tags :
Advertisement