Congress | காங்கிரஸ் கட்சியில் இணையும் பாஜக முன்னாள் அமைச்சர்.!! குஷியில் இந்தியா கூட்டணி.!
2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி முடிவடைய இருக்கிறது. இந்த பொது தேர்தலில் 7 கட்டங்களாக வாக்குப்பதிவுகள் நடைபெற உள்ளன. தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி உள்ளிட்ட சில பகுதிகளில் வருகின்ற 19ஆம் தேதி வாக்குப்பதிவு தொடங்க உள்ளது. பொதுத் தேர்தலுக்கான தேதியை நெருங்கி வருவதை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிரமான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறது.
மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியினர் நாடு முழுவதும் தீவிரமான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக பாரதிய ஜனதா கட்சியின் தலைமை தமிழ்நாட்டில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. அந்தக் கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி நட்டா கடந்த இரண்டு நாட்களாக தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் செய்து வாக்கு சேகரித்த நிலையில் பிரதமர் மோடி மீண்டும் தமிழ்நாட்டிற்கு வந்து பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய இருக்கிறார்.
தேர்தல் பணிகள் ஒருபுறம் நடைபெற்று வர ஒரு கட்சியிலிருந்து மற்றொரு கட்சிக்கு தாவும் நிகழ்வும் நடந்து வருகிறது . இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் பிஜேபி ஆட்சியில் இரண்டு முறை அமைச்சராக பதவி வகித்த சௌத்ரி வீரேந்திர சிங் பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்து இருப்பதாக அறிவித்திருக்கிறார். இது பாஜகவின் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
உத்திரப் பிரதேச மாநிலத்தைச் சார்ந்த முன்னாள் அமைச்சரான சௌத்ரி வீரேந்திர சிங் பாரதிய ஜனதா கட்சி துஷ்யந்த் சௌதாலா கட்சியுடன் கூட்டணி அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். அதனையும் மீறி பாஜக கூட்டணி அமைத்ததால் அந்த கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இவரது மகன் காங்கிரஸ் கட்சியில் உள்ள நிலையில் சௌத்ரி வீரேந்திர சிங் நாளை காங்கிரஸில் இணைய உள்ளார். இது இந்தியா கூட்டணி கட்சிகள் இடையே உற்சாகத்தை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கிறது.