முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

விரைவில் பாஜக தேர்தல்... வரும் 27-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வருகை...!

BJP elections coming soon... Union Home Minister Amit Shah to visit Tamil Nadu on 27th
05:55 AM Dec 25, 2024 IST | Vignesh
Advertisement

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நாளை மறுநாள் தமிழகம் வர உள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நாளை மறுநாள் தமிழகம் வர உள்ளார். நாளை மறுநாள் சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவண்ணாமலை செல்கிறார். அங்கு மாவட்ட பாஜக அலுவலகத்தை திறந்து வைக்கிறார். மேலும் கோவை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்ட அலுவலகங்களையும் காணொலி மூலம் திறந்து வைக்க உள்ளார்.

Advertisement

தொடர்ந்து, அருணாசலேஸ்வரர் கோயில் சென்று அமித்ஷா, சுவாமி தரிசனம் செய்கிறார். ஆளுநர் டெல்லி சென்று பிரதமரை சந்தித்திருக்கும் வேளையில் அமித்ஷாவின் தமிழக வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. தமிழக பாஜகவில் உட்கட்சி தேர்தல் தீவிரமாக நடைபெற்று வரும் வேளையில், அது குறித்தும் முக்கிய நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்த உள்ளார். அப்போது, கூட்டணி தொடர்பாகவும் அவர் கருத்துக் கேட்கவுள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நேரில் சந்தித்து அமித்ஷாவுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

அமித் ஷா தமிழகம் வருகை தரும் வேளையில் டிச.28-ம் தேதி விசிக சார்பில் அவரை கண்டித்து, சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகே ஆயிரம் முறை அம்பேத்கர் பெயரை உச்சரிக்கும் போராட்டத்துக்கு விசிக ஏற்பாடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
Amit shaannamalaiBJPmodiTamilanadu
Advertisement
Next Article