For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தேர்தல் ஆணையத்திற்கு படையெடுத்த பாஜக, காங்கிரஸ்!! காரணம் என்ன தெரியுமா?

05:45 AM Jun 03, 2024 IST | Baskar
தேர்தல் ஆணையத்திற்கு படையெடுத்த பாஜக  காங்கிரஸ்   காரணம் என்ன தெரியுமா
Advertisement

இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் பாஜக, காங்கிரஸ் மாறி மாறி புகார் மனுக்களை அளித்துள்ளன.

Advertisement

நாடு முழுவதும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற்றது. மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், நாளை ஜூன் 4 வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கைக்கான முழு ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.

இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை நியாயமாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்திடமும் எதிர்க்கட்சிகள் முறையிட்டு வருகின்றன. இந்த நிலையில், மத்தியில் ஆளும் பாஜகவின் மூத்த தலைவர்களும் மத்திய அமைச்சர்கள் ஆகியோர், நிர்மலா சீதாராமன் தலைமையில்தேர்தல் ஆணைய அலுவலகத்திற்கு நேரில் சென்று மனு அளித்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பியூஸ் கோயல் "காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியில் உள்ள சில கட்சிகளும் சில சமூக அமைப்புகள் மற்றும் என்.ஜி.ஓக்களும் தேர்தல் நடைமுறையை சிறுமைப்படுத்த முயற்சிக்கின்றன.எதிர்க்கட்சிகளின் இந்த செயல்பாடு இந்திய ஜனநாயக அமைப்புகள் மீதான நேரடி தாக்குதல் ஆகும். தேர்தல் ஆணைய அதிகாரிகளுடனான சந்திப்பின் போது வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடும் அதிகாரிகள் நடைமுறையின் போது விதிகளையும் நடைமுறைகளையும் நன்கு அறிந்தவர்களாக இருக்க வேண்டும்.

தேர்தல் ஆணைய மரபுகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும என வலியுறுத்தினோம். அது மட்டும் இன்றி, தேர்தல் நடைமுறையை சிறுமைப்படுத்த நடக்கும் முயற்சிகளை தடுத்து நிறுத்தி, இது போன்ற செயல்களுக்கு பொறுப்பானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தை கேட்டுக்கொண்டுள்ளோம்” என்று தெரிவித்தார்.

இதற்கு முன்னதாக தேர்தல் ஆணைய அதிகாரிகளை 'இந்தியா' கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் சந்தித்து மனு ஒன்று அளித்தனர். காங்கிரஸ் மூத்த தலைவரும் வழக்கறிஞருமான அபிஷேக் சிங்வி, திமுக எம்பி டிஆர் பாலு உள்ளிட்டோர் தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்தனர். இந்த சந்திப்பில் "வாக்கு எண்ணிக்கையின் போது முறைகேடு நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்" என வலியுறுத்தினர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அபிஷேக் சிங்வி, "தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் மூன்று முக்கிய பிரச்சனைகள் குறித்து மனு அளித்து இருக்கிறோம். வாக்கு எண்ணிக்கையை நேர்மையாக நடத்த வேண்டும். தபால் வாக்குகளை முதலில் எண்ண வேண்டும். தபால் வாக்குகளை எண்ணி முடித்த பிறகே இவிஎம் இயந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ண வேண்டும் என அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளோம்” என்று தெரிவித்தார்.

Read More: “மோடியின் உளவியல் விளையாட்டு தான் இந்த கருத்துக்கணிப்பு..!!” – காங்கிரஸ் குற்றச்சாட்டு

Tags :
Advertisement