முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

Election 2024 | பாஜக வேட்பாளர் பட்டியலில் மாற்றம்.!! திருநெல்வேலியில் களமிறங்கும் நயினார் நாகேந்திரன்.!!

07:53 PM Mar 21, 2024 IST | Mohisha
Advertisement

Election 2024: வர இருக்கின்ற பாராளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின்(BJP) சார்பாக நயினார் நாகேந்திரன் திருநெல்வேலியில் போட்டியிட இருப்பதாக அந்த கட்சி அறிவித்திருக்கிறது.

Advertisement

2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தல்(Election) வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் மாதம் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது. ஜூன் மாதம் 4-ஆம்தேதி வாக்குகள் என்னப்பட்டு முடிவு அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அரசியல் கட்சிகள் நடைபெற இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலுக்காக தீவிரமாக தயாராகி வருகின்றன. தமிழகத்தின் ஆளும் கட்சியான திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் எதிர்க்கட்சியான அதிமுகவும் அதன் கூட்டணி கட்சிகளோடு தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது.

தற்போது நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அதன் தலைமையில் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறது. அந்தக் கட்சியின் கூட்டணியில் தமாக மற்றும் பாமக போன்ற முன்னணி கட்சிகளும் இடம் பெற்று இருக்கின்றன. இந்நிலையில் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி போட்டி விடும் ஒன்பது தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு இருந்தது.

அந்தப் பட்டியலில் பாரதிய ஜனதா கட்சியைச்(BJP) சேர்ந்த நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்திருந்தது. ஆனால் பாரதிய ஜனதா கட்சி தூத்துக்குடி தொகுதியை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியிருந்த நிலையில் அந்த தொகுதியில் பாஜக வேட்பாளர் போட்டியிடுவதாக அறிவிப்பு வெளியானதால் கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து பாஜக கட்சி தனது தவறை திருத்திக் கொண்டு சரியான வேட்பாளர்கள் பட்டியலை மீண்டும் வெளியிட்டுள்ளது. அவர்கள் வெளியிட்டுள்ள புதிய பட்டியலின்படி நயினார் நாகேந்திரன் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிடுகிறார். மேலும் வர இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கோயம்புத்தூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட இருக்கிறார். மேலும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நீலகிரி தனி தொகுதியில் திமுக வேட்பாளர் ஆ.ராசாவை எதிர்த்து போட்டியிட இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Read More: “அக்னிபான்” ராக்கெட் திடீர் நிறுத்தம்… ஏன் தெரியுமா?

Advertisement
Next Article