BJP | சூடுபிடிக்கும் பாஜக வேட்பாளர் தேர்வு..!! தமிழ்நாட்டில் யார், யார் போட்டி..? இன்று டெல்லி பறக்கும் அண்ணாமலை..!!
தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, பாஜக தலைமையில் கூட்டணிகள் அமைத்து கட்சிகள் மக்களவை தேர்தலை சந்திக்க உள்ளன. பாஜக சார்பில் தமிழ்நாட்டில் யார் யாரை வேட்பாளர்களாக நிறுத்தலாம் என்று ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், தொகுதி வாரியாக கருத்துக்கேட்பு கூட்டங்கள் நடத்தி அதில் வெற்றி வாய்ப்பு மிக்க வேட்பாளர்களை தேர்வு செய்ய கட்சி தலைமை முடிவு செய்தது.
அதன்படி, தமிழ்நாடு முழுவதும் நாடாளுமன்றத் தொகுதிகளில் நேற்று நிர்வாகிகளுடன் கருத்துக்கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டது. தென்சென்னை தொகுதியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் தலைமையில் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது. மத்திய சென்னையில் மாநில துணைத்தலைவர் சபாபதி தலைமையிலும், வடசென்னையில் முன்னாள் எம்.பி., கே.பி.ராமலிங்கம், மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் ஆகியோர் தலைமையிலும் கூட்டம் நடந்தது.
இதில், நிர்வாகிகளிடம் கருத்துகள் கேட்கப்பட்டு பதிவு செய்யப்பட்டது. பின்னர், நேற்று இரவு 9 மணியளவில் சென்னை தியாகராய நகரில் உள்ள மாநில தலைமையகத்தில் வெற்றி வேட்பாளர்கள் யார், யார் என்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடந்தது. இந்நிலையில், இந்த பட்டியலை எடுத்துக்கொண்டு மாநில தலைவர் அண்ணாமலை இன்று (புதன்கிழமை) டெல்லி செல்கிறார்.
டெல்லியில் பா.ஜ.க. உயர்மட்ட குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் பா.ஜ.க. சார்பில் தயாரிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியலை உயர்மட்ட குழுவிடம் அண்ணாமலை வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல, அமித்ஷா, நட்டா உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்களுடன் அண்ணாமலை சந்தித்து பேச இருப்பதாகவும் கூறப்படுகிறது. பின்னர், பட்டியலை முழுமையாக ஆய்வு செய்து தமிழ்நாட்டில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என தெரிகிறது.
Read More : Breaking | பள்ளி மாணவர்களே..!! மார்ச் 25ஆம் தேதி முதல் நீட் தேர்வு பயிற்சி..!! தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!!