Election 2024: 5 வருடத்தில் கோடீஸ்வரனான பாஜக எம்.பி.!! பல மடங்காக உயர்ந்த தேஜஸ்வி சூர்யாவின் சொத்து மதிப்பு.!!
Election: 2024 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று ஜூன் மாதம் ஒன்றாம் தேதி வாக்குப்பதிவு முடிவடைய இருக்கிறது. இதனைத் தொடர்ந்து ஜூன் மாதம் நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும். வருகின்ற 19ஆம் தேதி முதல் கட்டமாக தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி உட்பட பல மாநிலங்களில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.
தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கர்நாடகா மற்றும் கேரளாவில் ஏப்ரல் 26 ஆம் தேதி வாக்குப்பதிவுகள் நடைபெற இருக்கிறது. கர்நாடக மாநிலத்தில் உள்ள 28 பாராளுமன்ற தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல்(Election) நடைபெற இருக்கிறது. ஏப்ரல் 26 ஆம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு மே மாதம் ஏழாம் தேதி இரண்டாம் கட்ட வாக்கு பதிவும் நடைபெற உள்ளது.
இந்நிலையில் பாஜக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்து வருகின்றனர். பாஜக யுவமோர்ச்சா தலைவரான தேஜஸ்வி சூர்யாவின் சொத்து மதிப்பு வெளியாகி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பெங்களூர் தெற்கு பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட இவர் கடந்த முறை 3.3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த முறையும் பெங்களூர் தெற்கு தொகுதியில் போட்டியிட கடந்த 4-ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்தார்.
தேர்தல் வேட்பு மனு தாக்கல் இன் போது தனது பிரமாண பத்திரத்தில் ரூ.4.10 கோடி ரூபாய்க்கு தனக்கு சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்திருக்கிறார் தேஜஸ்வி சூர்யா . கடந்த 2019 ஆம் வருட பாராளுமன்ற தேர்தலின் போது இவரது சொத்து மதிப்பு ரூ.13.46 லட்சம் ரூபாயாக இருந்தது என அப்போதைய பிரமாண பத்திரத்தில் தெரிவித்து இருந்தார். கடந்த ஐந்து ஆண்டுகளில் இவரது சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 30 % அதிகரித்து இருக்கிறது.
தனது சொத்துக்கள் பங்குகள் மற்றும் பரஸ்பர நிதி முதலீடுகளின் மூலம் பெறப்பட்டதாக தேஜஸ்வி சூர்யா தெரிவித்துள்ளார். பங்கு வர்த்தகத்தில் ரூ.1.79 கோடியும் மியூச்சுவல் ஃபண்ட்ஸில் ரூ.1.99 கோடி முதலீடு செய்திருப்பதாக தனது பிரமாண புத்திரத்தில் அவர் தெரிவித்திருக்கிறார். கடந்த தேர்தலில் தனக்கு மூன்று லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை தந்த பெங்களூர் தெற்கு பகுதி மக்கள் இந்த முறை 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை தருவார்கள் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் இந்த வெற்றியை மோடி ஜிக்கு சமர்ப்பிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.