For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

BJP | தேசிய கட்சிகளின் ஆண்டு வருவாய் ரூ.3,077 கோடி..!! முதலிடத்தில் பாஜக..!! காங்கிரஸ் கட்சியின் செலவு மட்டுமே இவ்வளவா..?

11:41 AM Feb 29, 2024 IST | 1newsnationuser6
bjp   தேசிய கட்சிகளின் ஆண்டு வருவாய் ரூ 3 077 கோடி     முதலிடத்தில் பாஜக     காங்கிரஸ் கட்சியின் செலவு மட்டுமே இவ்வளவா
Advertisement

கடந்த 2022 - 23ஆம் நிதியாண்டுக்கான தேசிய கட்சிகளின் ஆண்டு வருவாய் 3,077 கோடி ரூபாய் என தெரியவந்துள்ளது. இதில், அதிகபட்சமாக பாஜகவுக்கு 2,361 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது என ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. தேசிய கட்சிகள் ஆண்டுதோறும் தலைமை தேர்தல் கமிஷனிடம் சமர்ப்பிக்கும் வருவாய், செலவினங்கள் தொடர்பான விவரங்களை ஆய்வு செய்து, ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் என்ற தனியார் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

Advertisement

அதன்படி, 2022 - 23 நிதியாண்டில் பா.ஜ., காங்கிரஸ், பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேசிய மக்கள் கட்சி ஆகிய 6 தேசிய கட்சிகள் தங்களின் ஆண்டு வருவாய் தொடர்பான ஆவணங்களை தலைமை தேர்தல் கமிஷனிடம் சமீபத்தில் தாக்கல் செய்தன. அதன்படி, ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் ஆய்வு நடத்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது; “கடந்த 2022 - 23ஆம் நிதியாண்டில் 6 தேசிய கட்சிகளின் மொத்த வருவாய் 3,077 கோடி ரூபாய் ஆகும்.

அதிகபட்சமாக மத்தியில் ஆளும் பாஜகவுக்கு மட்டுமே 2,361 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இது, ஒட்டுமொத்த வருவாயில் 76.73 சதவீதம். அடுத்ததாக, காங்கிரஸ் 452.38 கோடி ரூபாய் வருவாயை ஈட்டியுள்ளது. அதற்கடுத்த இடங்களில் பகுஜன் சமாஜ் கட்சி, ஆம் ஆத்மி, தேசிய மக்கள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூ., ஆகியவை இடம் பிடித்துள்ளன. முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் பாஜகவின் வருவாய் 23.15 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதேபோல் தேசிய மக்கள் கட்சியின் வருவாயும் உயர்ந்துள்ளது. எனினும், முக்கிய எதிர்க்கட்சியாக விளங்கும் காங்கிரசின் வருவாய் இக்காலக்கட்டத்தில் 16.42 சதவீதம் சரிந்துள்ளது. இதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூ., பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் முறையே 12.68 சதவீதம் மற்றும் 33.14 சதவீதம் அளவுக்கு வருவாய் குறைந்துள்ளன. செலவினங்களை பொருத்தவரை, பாஜக தன் மொத்த வருவாயில் 57.68 சதவீதம் மட்டுமே செலவிட்டுள்ளது. ஆனால், காங்கிரஸ் தான் ஈட்டிய 452.38 கோடி ரூபாய் வருவாயில், 467.13 கோடி ரூபாய் அளவுக்கு செலவினங்களை மேற்கொண்டுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

English Summary : National parties declare income of Rs 3077 cr in 2022-23; BJP has highest share

Read More : DMK கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு..? ஒப்பந்தம் கையெழுத்து..?

Advertisement