PMO Modi | "ராமர் கோவிலை பாதுகாக்க பாஜக 400 இடங்களுக்கு மேல் ஜெயிக்க வேண்டும்.." பிரதமர் மோடி சர்ச்சை பேச்சு.!!
PMO 2024: ஆம் வருட பாராளுமன்ற தேர்தல் தற்போது நடைபெற்று வருகிறது. 7 கட்டங்களாக நடைபெறும் பொது தேர்தல் வாக்குப்பதிவில் இன்றோடு 3 கட்ட வாக்குப் பதிவுகள் முடிவடைந்து இருக்கிறது. நான்காம் கட்ட வாக்குப்பதிவு வருகின்ற 13-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இன்று நடைபெற்ற வாக்குப்பதிவில் 66.87% வாக்குகள் பதிவாகி இருக்கிறது.
இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசம் நாட்டிலேயே அதிக பாராளுமன்ற தொகுதிகளை கொண்டிருக்கிறது. 80 தொகுதிகளை கொண்ட உத்தர பிரதேசத்தில் பொதுத் தேர்தலில் 7 கட்டங்களிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. உத்தரப்பிரதேசத்தில் அதிக தொகுதிகளை கைப்பற்றுபவர்களுக்கே ஆட்சி அமைக்கும் வாய்ப்பு அதிகம் இருப்பதால் அம்மாநிலத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
உத்திரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் மோடி(PMO Modi) பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி ஏன் 400 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்ற வேண்டும் என தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக பேசியிருக்கும் அவர் ஓபிசி இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படாமல் இருக்க பாஜக 400 இடங்களுக்கு மேல் வெல்ல வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும் காஷ்மீர் இப்போதும் இந்தியாவோடு இணைந்து இருப்பதற்கும் ராமர் கோவில் புட்டப்படாமல் இருப்பதற்கும் பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி அதிக பெரும்பான்மையுடன் ஜெயிக்க வேண்டியது அவசியம் என தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சி ஓபிசி மற்றும் இந்துக்களின் இட ஒதுக்கீடு ரத்து செய்து இஸ்லாமியர்களுக்கு வழங்குவதை தடுக்க பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 400 தொகுதிகளுக்கு மேல் வெல்ல வேண்டும் என அவர் பேசியிருக்கிறார். பிரதமர் மோடியின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.