முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ஆந்திராவில் பாஜக கூட்டணி கட்சிகள் 106 தொகுதிகளில் வெற்றி பெறும்...! பிரசாந்த் கிஷோர் கருத்து...!

05:48 PM May 14, 2024 IST | Vignesh
Advertisement

ஆந்திராவில் சட்டசபை மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டி மிக பெரிய அளவில் தோல்வியை தழுவுவார் என தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் கூறி உள்ளார்.

Advertisement

ஆந்திராவில் சட்டசபை மற்றும் நாடாளுமன்ற தேர்தல் ஓட்டுப்பதிவு நேற்று நடந்து முடிந்தது. ஆந்திரா அரசியல் கள நிலவரம் குறித்து கூறிய பிரசாந்த் கிஷோர்; ஆந்திரா சட்டசபை தேர்தலில் ஆளும் ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் 67 தொகுதிகளில் வெற்றி பெறும். தெலுங்கு தேசம், பா.ஜ.க, மற்றும் பவன் கல்யாணின் ஜனசேனா கூட்டணி கட்சிகள் 106 தொகுதிகளில் வெற்றி பெறும். ஜெகன் மோகன் பெரிய அளவில் தோல்வியை தழுவுவார். ஆந்திராவில் மொத்தம் உள்ள 25 நாடாளுமன்ற தொகுதிகளில் பா.ஜ.க மற்றும் தெலுங்கு தேசம் கூட்டணி 15 தொகுதிகளிலும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் 8 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று நம்புவதாக கூறி உள்ளார்.

கடந்த 2019ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், ஜெகன் மோகன் ரெட்டிக்காக கடுமையாக உழைத்தவர்கள் தற்போது அவருக்கு எதிராக மாறியுள்ளனர். அதுவே அவருக்கு ஆபத்தானது. ஜெகன் மோகன் ரெட்டி தன்னை ஒரு ராஜா போல நினைக்கிறார். ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் போல அவர் நடந்து கொள்ளவில்லை என கூறியுள்ளது ஆந்திரா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement
Next Article