போலி ஐஎஸ்ஐ முத்திரை பயன்படுத்தி தண்ணீர்...! அதிகாரிகள் அதிரடி சோதனை...!
போலி ஐஎஸ்ஐ முத்திரை பயன்படுத்திய பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீர் ஆலையில் பிஐஎஸ் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
இந்திய தர நிர்ணய அமைவனம் (BIS), சென்னை கிளை அலுவலகத்தின் அதிகாரிகள் குழு, BIS சட்டம், 2016 ஐ மீறுவதாக சந்தேகிக்கப்படும் தகவலின் அடிப்படையில், MJS Enterprises சந்தைமேடு, மூங்கில்தோரைப்பட்டு, சங்கராபுரம் தாலுகா, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர். இந்த நடவடிக்கையின் போது அதிகாரிகள் BIS சட்டம் 2016 இன் பிரிவு 28 இன் படி, நிறுவனம், பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீர் நிரப்பப்பட்ட 372 எண்ணிக்கையிலான 1 லிட்டர் PET ஜாடிகள் பறிமுதல் செய்தனர்.
மேலும், போலியான ISI முத்திரையுடன், IS 14543, CM/L 6100100968, அரசு அக்வா – பிராண்ட் ஒட்டப்பட்ட நிலையுடன், தேடுதல் மற்றும் பறிமுதல் நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்டன. கூடுதலாக, சுமார் 500 எண்ணிக்கையிலான போலியான ISI முத்திரை, IS 14543, CM/L 6100100968, Arasu Aqua என்று குறிக்கப்பட்ட 20 லிட்டர் PET ஜாடிகளில் பயன்படுத்துவதற்கான லேபிள்களும் கைப்பற்றப்பட்டன.
பொது மக்கள், எவரேனும் இது போன்ற தகவல் தெரிந்தால் BIS Care செயலியைப் பயன்படுத்தியோ அல்லது cnbo1@bis.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புவதன் மூலமாகவோ தகவல் தெரிவிக்கலாம்.