பிரியாணி, சிக்கன் ரைஸ்..!! சமைத்த 3 மணி நேரத்திற்குள் சாப்பிட்டு விடுங்கள்..!! இல்லையென்றால் உயிருக்கே ஆபத்து..!!
பள்ளி மாணவிகளுக்கான கூடைப்பந்து போட்டி மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியரில் நடைபெற்ற நிலையில், இப்போட்டியில் கோவை தனியார் பள்ளியில் படித்து வந்த எலினா லாரேட் என்ற பள்ளி மாணவி பங்கேற்றுள்ளார். போட்டி முடிந்து கடந்த 15ஆம் தேதி ரயில் மூலம் மீண்டும் தமிழ்நாடு புறப்பட்டுள்ளார். இந்நிலையில், ரயிலில் வந்த மாணவிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், அவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
மாணவியின் உயிரிழப்பு குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல் வெளியானது. அதாவது, ரயிலில் வரும் போது மாணவி பர்கர், சிக்கன் ரைஸ், பீட்சா உள்ளிட்டவற்றை ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார். அதன்பிறகு, மாணவிக்கு வயிற்று வலி, வாந்தி போன்ற உபாதைகளால் அவதிக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், பிரியாணி, சிக்கன் ரைஸ் போன்றவற்றை சமைத்த 3 மணிநேரத்திற்குள் சாப்பிட வேண்டுமென்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அப்படி இல்லாமல் நீண்ட நேரம் அவற்றை வைத்திருந்தால், காற்றில் உள்ள வைரஸ் பாக்டீரியாக்கள் அதில் கலந்து விஷமாகி விடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஏற்கனவே சமைத்த சிக்கன், மட்டன் உள்ளிட்ட உணவுகளை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக் கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.