முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பிறந்த நாளுக்கு நன்கொடை வழங்கிய பிரபலம்.... கோயிலுக்கு வாரி வழங்கிய என்.டி.ஆர்.

10:15 AM May 17, 2024 IST | shyamala
Advertisement

தனது பிறந்த நாளை முன்னிட்டு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். கோயிலுக்கு நன்கொடை அளித்துள்ளார்.

ஆர்.ஆர்.ஆர்' பட வெற்றியால் இந்திய அளவில் பிரபலமான ஜூனியர் என்.டி.ஆர், தற்போது அவரது 30ஆவது படமான தேவாரா படத்தில் நடித்து வருகிறார். இறுதிக் கட்ட படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனிடையே இந்தியில் ஹ்ரித்திக் ரோஷனுடன்  'வார் 2' படத்திலும் நடித்து வருகிறார். இப்படங்களை அடுத்து கே.ஜி.எஃப் பட இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

Advertisement

தனது 41-வது பிறந்த நாள் வரும் 20ம் தேதி கொண்டாடப்பட உள்ளார். இதனை முன்னிட்டு ஆந்திராவில் உள்ள செய்யேறு ஸ்ரீ பத்திரகாளி சமேத வீரபத்திர சாமி கோவிலுக்கு 12.5 லட்சம் ரூபாய் நன்கொடை அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வர்களுக்காக ஆந்திர பிரதேச முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 25 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார்.

பிறந்தநாளை முன்னிட்டு கோவிலுக்கு ஜூனியர் என்.டி.ஆர். நன்கொடை அளித்திருப்பதை அவருடைய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பரவ விட்டுள்ளனர்.

அதிகரிக்கும் நீர்வரத்து..!! 4 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!!

Advertisement
Next Article