For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

வானிலை அறிவியலின் தந்தை கலீலியோ கலிலி பிறந்தநாள்!... அனைத்து கோள்களும் சூரியனைச் சுற்றி வருகிறது என்பதை நிரூபித்தவர்!

10:10 AM Feb 15, 2024 IST | 1newsnationuser3
வானிலை அறிவியலின் தந்தை கலீலியோ கலிலி பிறந்தநாள்     அனைத்து கோள்களும் சூரியனைச் சுற்றி வருகிறது என்பதை நிரூபித்தவர்
Advertisement

பூமி தன்னைத் தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றிவருகிறது என்பதை ஆதாரத்துடன் நிரூபித்தவரும் வானிலை அறிவியலின் தந்தையுமான கலீலியோ கலிலி பிறந்தநாள் இன்று. கலீலியோ கலிலி 1564 ஆம் ஆண்டு பிப் 15 ஆம் தேதி இத்தாலியில் பிறந்தார். ஆரம்பத்தில் கலீலியோவிற்கு கணிதத்தில் ஆர்வம் அதிகமாக இருந்தது. பின்னர் அந்த ஆர்வம் வானியல் ஆராய்ச்சிகளுக்கு இடம் பெயர்ந்தது. அதன் பலன், வானியல் தொடர்பான ஆராய்ச்சிகளை மிகத்தீவிரமாக மேற்கொண்டார்.

Advertisement

வானியல் ஆய்வுகளுக்கு பயன்படுகிற தொலை நோக்கியை (டெலஸ்கோப்) 1609 ஆம் ஆண்டு உருவாக்கினார். மேம்படுத்தப்பட்ட அடிப்படை தொலைநோக்கியை கொண்டு வெள்ளியின் வெவ்வேறு பரிமாணங்களை உறுதி செய்த கலீலியோ, சூரியனில் காணப்படும் கரும்புள்ளியை ஆராய்ச்சி செய்வது, தொலைநோக்கியை திருத்தி அமைப்பது உள்ளிட்டவற்றிற்கு அளப்பரிய பங்கை ஆற்றினார்.

1610 ஆம் ஆண்டு ஜனவரி 7 ஆம் தேதி வியாழனுக்கு அருகில் மூன்று நட்சத்திரங்கள் இருப்பதை கண்டுபிடித்த அவர் அவை நிலையானவை அல்ல என்பதையும் கண்டறிந்தார். அவற்றில் ஒன்று ஜனவரி மாதத்தில் மறைந்த நிலையில், அது வியாழனின் பின் மறைந்திருக்க வேண்டும் என்று கணித்ததோடு, அவை மூன்றும் நிலாக்களாக இருக்க வேண்டும் என்பதையும் உறுதி செய்தார். அதே மாதம் 13 அன்று நான்காவது வியாழனின் நிலாவை கண்டுபிடித்க்தார். அதன் பின்னர் வானவியலாளர்கள் இந்த நான்கு நிலைகளையும் கலிலியன் நிலாக்கள் என குறிப்பிட்டனர். இந்த நிலாக்கள் தற்போது ஐயோ, ஐரோப்பா, கேனிமேட் மற்றும் கால்லிச்டோ என்று அழைக்கப்படுகின்றன.

பைசாவின் சாய்ந்த கோபுரத்தின் மேல் நின்று இவர் நிகழ்த்திய விழும் பொருள்கள் குறித்தான ஆராய்ச்சி பிரபல ஆராய்ச்சியாளர் அரிஸ்டாட்டில் கூற்றை மாற்றியது. ஒரே சமயத்தில் கனமான மற்றும் கனமில்லா பொருள்கள் விழும் பட்சத்தில் கனமான பொருளே முதலில் விழும் என்பது அரிஸ்டாட்டிலின் கூற்று. ஆனால் கலீலியோ சாய்ந்த கோபுரத்தின் மேல் நின்று வெவ்வேறு நிறைகளையுடைய பொருள்களைக் கீழே விழச்செய்து கீழே விழும் நேரத்திற்கும், அதன் நிறைக்கும் தொடர்பில்லை என்று கூறினார்.

1616 ஆம் ஆண்டில் பூமி உட்பட அனைத்து கோள்களும் சூரியனைச் சுற்றி வருகின்றன என்ற உண்மையை உலகத்திற்கு வெளிச்சமிட்டு காட்டியவர் இவர்தான். அவர் வாழ்ந்த காலத்தில் அறிவியல் துறைகள் அனைத்துமே மதத்துடன் பின்னிப்பிணைந்திருந்தது. பைபிளின் படி ‘உலகம் நிலையானது அசையாதது’ என்ற நம்பிக்கை மிகவும் ஆழமாக வேறுன்றி இருந்தது. ஆகையால் இதற்கு எதிராக அரிஸ்டாட்டில் உட்பட பலர் ஆராய்ச்சியாளர்கள் முன்வைத்த ஆராய்ச்சிகள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஆனால் இந்த குழப்பங்களை முடிவுக்கு கொண்டு வந்தது கலீலியோ கண்டறிந்த தொலைநோக்கிகள்; அதன் படி அவர் சூரியமையக்கோட்பாட்டை ஆதரித்தார்.

ஆகையால் அவர் கிறிஸ்துவ மதத்திற்கு எதிரான செயலை செய்து விட்டார் என்று கூறி 1633 ஆம் ஆண்டு முதல் சாகும் வரை கருதி கத்தோலிக்க திருச்சபை அவரை வீட்டுச்சிறையில் வைத்தது. சிறைவைக்கப்பட்ட காலத்தில் பொருள்களின் இயக்கம் குறித்த சோதனைகளை எழுதினார். அது அறிவியல் வளர்ச்சிக்கு பின்னாளில் ஆதாரமாக அமைந்தது. இருதயக் கோளாறு பிரச்சினை காரணமாக 1642-ம் ஆண்டு அவர் உயிரிழந்தார். அவரை போற்றுவிதமாக நவீன அறிவியலின் தந்தை, நவீன இயற்பியலின் தந்தை, நவீன வானியலின் தந்தை என பல்வேறு பெயர்கள் அவருக்கு சூட்டப்பட்டன.

Tags :
Advertisement