முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

மக்களே...! பிறப்பு, இறப்பு சான்றிதல்களை இணையதளம் வாயிலாக கட்டணமின்றி பதிவிறக்கம் செய்யலாம்...!

06:30 AM Dec 15, 2023 IST | 1newsnationuser2
Advertisement

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் தவறவிட்ட மற்றும் சேதமடைந்த பிறப்பு, இறப்பு சான்றிதல்களை இணையதளம் வாயிலாக கட்டணமின்றி பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என பொது சாகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை அறிவித்துள்ளது.

Advertisement

மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட மழை மற்றும் வெள்ளம் காரணமாக சென்னையில் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, பிறப்பு,இறப்பு, சாதி, இருப்பிடம், வாரிசு, பள்ளி, கல்லூரி உள்ளிட்ட அரசு சான்றிதழ்களை இழந்தவர்கள், அவற்றை மீண்டும் கட்டணமின்றி பெறும் வகையில் சிறப்புமுகாம்கள் நடத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

அதனடிப்படையில் மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து மண்டலங்களிலும் இழந்த அரசு சான்றிதழ்களை மீண்டும் பெற இன்று முதல் சிறப்பு முகாம்கள் தினந்தோறும் காலை 10 முதல் மாலை 5 மணி வரை நடத்தப்படவுள்ளது. அதன்படி திருவொற்றியூர், மணலி, புழல், மாதவரம், அம்பத்தூர், பாடி, அண்ணாநகர், கீழ்ப்பாக்கம், மயிலாப்பூர், தேனாம்பேட்டை, திருவல்லிக்கேணி, கோடம்பாக்கம், தி.நகர், போரூர், வேளச்சேரி, அடையாறு, மடிப்பாக்கம், பள்ளிக்கரணை உட்பட 46 பகுதி அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் தவறவிட்ட மற்றும் சேதமடைந்த பிறப்பு, இறப்பு சான்றிதல்களை crstn.org என்ற இணையதளம் வாயிலாக கட்டணமின்றி பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என பொது சாகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை அறிவித்துள்ளது.

Tags :
certificatetn government
Advertisement
Next Article