தமிழக கோழிகளுக்கு பறவைக்காய்ச்சல் தடுப்பூசி!… மத்திய அரசின் எச்சரிக்கையை அடுத்து தீவிர நடவடிக்கை!
Bird flu vaccine: 4 மாநிலங்களில் பரவைக்காய்ச்சல் பரவல் வேகமெடுத்துள்ளதையடுத்து, தமிழகத்தில் உள்ள பண்ணைகளில் கோழிகளுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.
ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்கள் பொதுவாக புலம்பெயர்ந்த பறவைகளிடையே பரவுவதாக சொல்லப்படுகிறது. இது வளர்ப்பு கோழி பறவைகள் மத்தியில் வெடிப்பை ஏற்படுத்தும். இது புலம்பெயர்ந்த பறவைகள் கோழிகளுடன் தொடர்பு கொண்டால் இவ்வாறு ஏற்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இது எளிதாக மனிதர்களிடம் பரவக்கூடியதாம்.
இந்தியாவின் சில மாநிலங்களில் இந்த பறவைக் காய்ச்சல் தொற்று பரவி வருவதால், விழிப்புடன் இருக்க எச்சரிக்கையை வழங்கியுள்ளது. தொற்று பரவலை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து மக்களுக்குத் தெரிவிக்கவும் அந்தந்த மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “ஏதேனும் இடங்களில் பறவைகள் மற்றும் கோழிகள் வழக்கத்திற்கு மாறாக உயிரிழந்தால் அதனை கவனத்தில் கொள்ளவும், அது குறித்து உடனடியாக கால்நடை பராமரிப்புத் துறைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்” என்று கூறியுள்ளது.
பறவைக் காய்ச்சலின் அறிகுறிகள் தென்பட்டால் உங்கள் மாநிலத்தில் உள்ள அனைத்து சுகாதாரப் பணியாளர்கள், தனியார் மருத்துவமனைகளுக்குத் தெரிவிக்குமாறும் கூறப்பட்டுள்ளது. மேலும் அனைத்து கோழி பண்ணைகளையும் ஆய்வு செய்யுவும், சுகாதாரம் மற்றும் பாதுகாப்புக் கண்ணோட்டத்தில் கொடுக்கப்பட்ட அனைத்து விதிகளும் அங்கு பின்பற்றப்படுகிறதா என்பதைச் சரிபார்க்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அந்தவகையில், கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மாநிலங்களில் பறவைக்காய்ச்சல் தொற்று பரவல் வேகமெடுத்துள்ளது. இதனால், அண்டை மாநிலங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் ஒருபகுதியாக தமிழகத்தில் பறவைக்காய்ச்சல் பரவலை தடுக்கும் விதமாக பண்ணைகளில் கோழிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.