For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பால் மூலம் பரவும் பறவைக் காய்ச்சல்!… அமெரிக்காவில் 2வது நபர் பாதிப்பு!

11:33 AM May 23, 2024 IST | Kokila
பால் மூலம் பரவும் பறவைக் காய்ச்சல் … அமெரிக்காவில் 2வது நபர் பாதிப்பு
Advertisement

Bird Flu: பால் மூலம் பரவும் H5N1 பறவைக் காய்ச்சல் பாதிப்பு அமெரிக்காவில் இரண்டாவது நபருக்கு உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

கடந்த மார்ச் மாத இறுதியில் அமெரிக்காவில் உள்ள கோழிகள் மற்றும் பசுக்களுக்கு பறவைக்காய்ச்சல் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இந்நிலையில், பசும்பாலிலும் இந்த தொற்றை ஏற்படுத்தும் வைரஸ்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, டெக்சாஸ் மாகாணத்தில் பால் பண்ணையில் பணியாற்றும் தொழிலாளிக்கு ஏப்ரல் மாதம் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இருப்பினும் அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) பொதுமக்களுக்கு ஆபத்து குறைவாக இருப்பதாகக் கூறியது.

பறவைக் காய்ச்சல் மனிதனுக்கு மனிதனுக்கு பரவுவதற்கான ஆதாரங்களைக் காணவில்லை என்றும், மார்ச் முதல் மிச்சிகன் தொழிலாளி உட்பட 40 பேரை பரிசோதித்ததாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் பரிசோதிக்கப்பட்ட அனைத்து நபர்களும் ஒரு பால் பண்ணையுடன் இணைக்கப்பட்டவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில், மிச்சிகனில் உள்ள பால் பண்ணை பணியாளர் ஒருவருக்கு இந்த தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அறிவித்துள்ளது. மிச்சிகன் சுகாதாரத்துறை கூற்றுப்படி, H5N1 வைரஸால் பாதிக்கப்பட்ட தொழிலாளி லேசான அறிகுறிகளை மட்டுமே கொண்டிருந்தார் மற்றும் குணமடைந்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளது. பணியாளரிடமிருந்து இரண்டு மாதிரிகள் சேகரிக்கப்பட்டன, அதில் ஒன்று மூக்கிலிருந்து மற்றொன்று கண்ணில் இருந்து பரிசோதிக்கப்பட்டன. இதில் கண் மாதிரி மட்டுமே நேர்மறையாக சோதனை செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெக்சாஸசில் பாதிக்கப்பட்டவரை போலவே, மிச்சிகன் நோயாளிக்கும் கண் அறிகுறிகள் மட்டுமே தெரிந்ததாக கூறப்பட்டுள்ளது.

நேற்றைய(மே 22) நிலவரப்படி, 50 மாநிலங்களில் ஒன்பது மாநிலங்களில் மொத்தம் 52 அமெரிக்க பண்ணைகளில் மாடுகள் பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளன. "பாதிக்கப்பட்ட பறவைகள் அல்லது பிற விலங்குகளுக்கு (கால்நடைகள் உட்பட) நெருங்கிய அல்லது நீடித்த, பாதுகாப்பற்ற வெளிப்பாடுகள் உள்ளதாகவும் தொற்றுநோய்க்கான அதிக ஆபத்தில் இருப்பதாகவும் என்று CDC கூறியது. இருப்பினும், தற்போதைய H5N1 விகாரம் மில்லியன் கணக்கான கோழிகளைக் கொன்றாலும், பாதிக்கப்பட்ட மாடுகள் கடுமையாக நோய்வாய்ப்படவில்லை.

1996 ஆம் ஆண்டும் சீனாவில்தான் பறவை காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. பின்னர் உலகம் முழுவதும் பரவியுள்ளது. பறவை காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸால் பாதிக்கப்பட்ட உயிரினம் அல்லது அவற்றின் எச்சங்கள் மூலமாக நேரடி தொடர்பு ஏற்பட்டால் இத்தொற்று மனிதர்களுக்கும் ஏற்படும். இருப்பினும் மனிதர்களிடமிருந்து மனிதருக்கு இந்த வைரஸ் காய்ச்சல் பரவுகிறது என்பதற்கான ஆதாராம் தற்போது வரை கிடைக்கப் பெறவில்லை.

Readmore: தன்னுடைய ஆபாச வீடியோவை வைத்தே ஆபீஸரை மடக்கிய பெண்..!! சென்னை ஓட்டலில் பரபரப்பு சம்பவம்..!!

Advertisement