பறவை காய்ச்சல் அச்சுறுத்தல்!. வியட்நாம் பூங்காவில் 47 புலிகள், 3 சிங்கங்கள் பலி!.
Bird flu: வியட்நாம் மிருகக்காட்சிசாலையில் பரவிய பறவைகாய்ச்சல் காரணமாக 47 புலிகள் உயிரிழந்துள்ளன என மிருகக்காட்சிசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தெற்கு வியட்நாமில் உள்ள ஹோசிமின் நகரின் வூன்சோய்உயிரியல் பூங்கா அமைந்துள்ளது. இங்கு சிங்கங்கள், கரடிகள், காண்டாமிருகங்கள், நீர்யானைகள் மற்றும் ஒட்டகச்சிவிங்கிகள் உட்பட சுமார் 3,000 விலங்குகள் உள்ளன. இந்தநிலையில், இந்த மிருகக்காட்சி சாலையில், விலங்குகளுக்கு பறவைக்காய்ச்சல் பரவியுள்ளது. முன்னதாக அருகில் இருந்த பண்ணையில் வாங்கப்பட்ட பாதிக்கப்பட்ட கோழிகளின் இறைச்சியை உண்ட விலங்குகள் நோய்வாய்ப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, நாளுக்குநாள் விலங்குகளின் உடல்நிலை மோசமாகியுள்ளனது. இதையடுத்து, ஆகஸ்ட் மாதம் முதல் 47 புலிகள், மூன்று சிங்கங்களும் இறந்துள்ளன எனவும், செப்டம்பர் மாதத்தில் ஒரு வாரத்திற்குள் 27 புலிகள் மற்றும் 3 சிங்கங்கள் இறந்தன மிருகக்காட்சிசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
உயிரிழந்த புலிகளிடமிருந்து எடுக்கப்பட்ட இரண்டு மாதிரிகளை சோதனை செய்ததில் பறவைக்காய்ச்சல் தொற்று உறுதியாகியுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் 20க்கும் மேற்பட்ட புலிகள் கண்காணிப்புக்காக தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், புலிகளைப் பராமரித்து வந்த 30 பணியாளர்களுக்கு பறவைக் காய்ச்சலுக்கு நெகட்டிவ் எனச் சோதனையில் தெரிவிக்கப்பட்டு, சாதாரண உடல்நிலையில் இருப்பதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
இந்த வைரஸ் முதன்முதலில் 1959 இல் கண்டறியப்பட்டது மற்றும் புலம்பெயர்ந்த பறவைகள் மற்றும் வளர்ப்பு கோழிகளுக்கு பரவலான மற்றும் மிகவும் ஆபத்தான அச்சுறுத்தலாக வளர்ந்தது.மேலும் சமீபத்திய ஆண்டுகளில் நாய்கள் மற்றும் பூனைகள் முதல் கடல் சிங்கங்கள் மற்றும் துருவ கரடிகள் வரை வளர்ந்து வரும் விலங்குகளில் H5N1 கண்டறியப்பட்டது. மேலும் இந்த வைரஸ், பூனைகளில், வைரஸ் மூளையைத் தாக்கி, இரத்த நாளங்களை சேதப்படுத்தி, உறையவைத்து, வலிப்பு மற்றும் மரணத்தை ஏற்படுத்துவதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
Readmore: ’இன்டர்நெட் வேகத்தை அதிகரிக்க இப்படியும் செய்யலாமா’? ’உடனே இதை ஆக்டிவேட் பண்ணுங்க’..!!