For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பறவை காய்ச்சல்...! 8 பேர் தனிமைப்படுத்தி சிகிச்சை...!

06:50 AM Apr 29, 2024 IST | Vignesh
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பறவை காய்ச்சல்     8 பேர் தனிமைப்படுத்தி சிகிச்சை
Advertisement

ஜார்க்கண்ட் மாநிலத்தில் கோழிகளுக்கு பறவைக் காய்ச்சல் பரவி வருகின்றன. பாதிக்கப்பட்ட கோழிகளுக்கு சிகிச்சை அளித்த 2 கால்நடை மருத்துவர்கள் உட்பட, 8 பேரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Advertisement

ராஞ்சியில் பறவைக் காய்ச்சல் பரவியதை அடுத்து, ஹோட்வாரில் உள்ள பிராந்திய கோழிப் பண்ணையின் இரண்டு மருத்துவர்கள் மற்றும் ஆறு ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். பறவைக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கால்நடை பராமரிப்பு அமைச்சகத்தின் கீழ், அனைத்துப் பறவைகளின் விற்பனை மற்றும் கொள்முதல் மீது கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

ராஞ்சி துணை கமிஷனர் ராகுல் குமார் சின்ஹா கூறுகையில், "ராஞ்சியில் பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டவுடன், கால்நடை பராமரிப்பு அமைச்சகம் குறிப்பிட்டுள்ள வழிகாட்டுதல்களின் கீழ் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. முதல் நடவடிக்கையாக கோழி இறைச்சி விற்பனைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஹோட்வாரில் ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் அனைத்து பறவைகளின் விற்பனை மற்றும் கொள்முதல் செய்ய தடை செய்யப்பட்டுள்ளது என்றார்.

Advertisement