தீயாய் பரவும் பறவை காய்ச்சல்..!! கோழிக்கறி, முட்டை சாப்பிடலாமா..? பீதியில் பொதுமக்கள்..!! மருத்துவர்கள் விளக்கம்..!!
தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கேரளாவில் பறவை காய்ச்சல் பீதி அதிகரித்திருக்கும் நிலையில், தமிழ்நாட்டிலும் காய்ச்சல் பரவாமல் இருக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பறவை காய்ச்சல் பீதியால் கோழி விற்பனை சற்றே குறைந்திருப்பதாக வியாபாரிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
கேரள மாநிலத்தில் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள சில கோழி மற்றும் வாத்து பண்ணைகளில் பறவைகளுக்கு பறவை காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால், அங்கு உச்சபட்ச கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இருந்து நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கான வாகனங்கள் கேரளா சென்று வரும் நிலையில், தமிழ்நாட்டிலும் நோய் தொற்று பரவாமல் இருக்க தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் தொடர்ந்து பறவை காய்ச்சல் பாதிப்பு குறித்து செய்திகள் வெளிவந்த வண்ணம் இருப்பதால் கோழி நுகர்வோர் சற்றே பயத்தில் உள்ளனர். இதனால், தமிழ்நாட்டில் கோழி விற்பனை லேசாக சரிந்து இருப்பதாக கூறப்படுகிறது. வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் டன் கணக்கில் கோழிகள் விற்பனையாவது வழக்கம். ஆனால், இந்த முறை மகாவீர் ஜெயந்தி மற்றும் பறவை காய்ச்சல் பீதி காரணமாக கோழி விற்பனை வெகுவாக குறைந்து இருப்பதாக கூறுகின்றனர் வியாபாரிகள்.
இந்நிலையில், கோழிகளை சாப்பிடுவதாலும், முட்டைகள் சாப்பிடுவதாலும் பறவை காய்ச்சல் பரவுமா என்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் விளக்கம் அளித்து இருக்கிறார்கள். பொதுவாக கோழிகளையும் முட்டைகளையும் உயர் வெப்ப நிலையில் சமைப்பதால் அதிலுள்ள வைரஸ் உள்ளிட்ட நுண்ணுயிர்கள் மடிந்து விடும். கோழி இறைச்சியை நன்கு சமைத்து சாப்பிடும் போது பறவை காய்ச்சல் வருவதற்கான வாய்ப்பில்லை என கூறுகின்றனர். அதே நேரத்தில் கோழி பண்ணைகளில் பாதிப்பு உறுதி செய்யப்பட்டால் அருகில் வசிப்பவர்களுக்கு காய்ச்சல் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. மேலும், முட்டைகளை பச்சையாக எடுத்துக் கொள்வதும் காய்ச்சல் பரவுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
Read More : Gold | ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.16,800..? அதிர்ச்சியில் உறைந்த பொதுமக்கள்..!!