For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தமிழ்நாட்டை காப்பியடித்த பீகார்!… பிசி,எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீடு 65% ஆக உயர்வு!… முதல்வர் நிதிஷ் குமார் அதிரடி!

07:00 AM Nov 08, 2023 IST | 1newsnationuser3
தமிழ்நாட்டை காப்பியடித்த பீகார் … பிசி எஸ்சி  எஸ்டி இடஒதுக்கீடு 65  ஆக உயர்வு … முதல்வர் நிதிஷ் குமார் அதிரடி
Advertisement

பீகார் மாநிலத்தில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி மக்களுக்கான இடஒதுக்கீட்டு அளவை 65% ஆக அதிகரிப்பதாக முதல்வர் நிதிஷ்குமார் அதிரடியாக அறிவித்துள்ளார்.

Advertisement

1931ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியில்தான் பீகார் மாநிலத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் பின்னர் அண்மையில்தான் ஜாதிவாரி கணக்கெடுப்பை அம்மாநில அரசு அண்மையில் நடத்தியது. இந்தநிலையில், நேற்று பீகார் சட்டசபையில் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்கள் இன்று தாக்கல் செய்யப்பட்டன. அப்போது பேசிய முதலமைச்சர் நிதிஷ் குமார், பீகாரில் 60%க்கும் அதிகமாக பிற்படுத்தப்பட்ட மக்கள் உள்ளனர். ஆகையால் அவர்களுக்கான இடஒதுக்கீடு 30%-ல் இருந்து 43% ஆக உயர்த்தப்படுகிறது என அறிவித்தார். அந்தவகையில், மொத்தமாக பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்களுக்கான இடஒதுக்கீடு அளவு 65% ஆக உயருகிறது. உயர்ஜாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீட்டையும் சேர்த்தால் பீகாரில் இடஒதுக்கீடு அளவு 75%ஆகும் என்று கூறினார்.

தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்களுக்கான இடஒதுக்கீடு 69% ஆக உள்ளது. இந்த 69% இடஒதுக்கீடு சட்டத்துக்கு அரசியல் சாசன பாதுகாப்பு வழங்கும் வகையில் ஏற்கனவே ஜனாதிபதியின் ஒப்புதல் பெறப்பட்டு அரசியல் சாசனத்தின் 9-வது அட்டவணையில் சேர்க்கப்பட்டுவிட்டது. இதனால் உச்சநீதிமன்றத்தில் முட்டி மோதியும் தமிழ்நாட்டின் 69% இடஒதுக்கீட்டுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இதர மாநிலங்களின் இடஒதுக்கீடு வழக்குகளில் உச்சநீதிமன்றமானது இடஒதுக்கீடு அளவு 50%க்குள் இருக்க வேண்டும் என தீர்ப்புகள் வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement