'தற்கொலை முடிவுக்கு தள்ளிய பிக்பாஸ் நிகழ்ச்சி’..!! ’பிரதீப்ப இப்போ புரிஞ்சிக்கிட்டேன்’..!! ஐஷூ உருக்கம்..!!
விஜய் டிவியில் பிக்பாஸ் 7வது சீசன் நடைபெற்று வருகிறது. இதில் உதகை ஏ.டி.எஸ் நடன குழுவை சேர்ந்த ஐஷு போட்டியாளராக பங்கேற்றிருந்தார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சில நடன நிகழ்ச்சிகளில் நடனமாடியதன் மூலம் பிரபலமானவர். கடந்த வாரம் குறைந்த வாக்குகளை பெற்றதன் மூலம் ஐஷு பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். இதற்கு காரணம் நிக்சனிடம் காட்டிய நெருக்கம் தான் என்று கூறப்படுகிறது. மேலும், இவரின் சில செயல்களும், பேச்சுகளும் ரசிகர்களை வெறுப்படைய செய்தது.
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட ஐஷு, உருக்கமான ஒரு மன்னிப்பு கடிதத்தை வெளியிட்டுள்ளார். அதில், ”இந்த நிகழ்ச்சியை பார்க்கும் அனைவரிடமும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என்னை நம்பிய அனைவருக்கும் நான் ஏமாற்றத்தை தந்துவிட்டேன். எனக்கும் என்னுடைய குடும்பத்திற்கும் சக பெண்களுக்கும் அவப்பெயரை ஏற்படுத்தி விட்டேன். என்னை பார்த்து எனக்கே மரியாதை இழந்து விட்டது.
என்னுடைய தவறான செயல்களில் இருந்து என்னை காப்பாற்ற முயன்ற யுகேந்திரன் அவர்கள், விச்சும்மா அவர்கள் பிரதீப் மற்றும் அர்ச்சனா, மணி ஆகியோர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நான் இந்நிகழ்ச்சிக்கு தகுதியானவர் இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்து விட்டது. கோபம், காதல், பொறாமை, நட்பு ஆகியவை என்னை கண்மூடித்தனம் ஆக்கிவிட்டது. என்னுடைய தாழ்மையான வேண்டுகோள் என்னவென்றால் என் குடும்பத்தை தயவுசெய்து விட்டு விடுங்கள். சமூக ஊடகங்களில் என்னை பற்றிய கருத்துக்கள் வீடியோக்களை நான் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். இன்று வரை என்னை வளர்ப்பதற்காக அவர்கள் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.
இந்நிகழ்ச்சி என்னை தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு தள்ளிவிட்டது. ஆனால், என் பெற்றோர் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையால் மட்டும் நான் உயிருடன் இருக்கிறேன். பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்ததற்காக உண்மையிலேயே நான் வருந்துகிறேன். அவருடைய நல்ல நோக்கங்களை இப்போது நான் புரிந்து கொண்டேன். இந்நிகழ்ச்சியில், ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்தியதற்காக நான் மிகவும் வருந்துகிறேன். இந்த நிகழ்ச்சியில் எனது செயல்கள் இழிவாக, அவமரியாதையாக, முதிர்ச்சியாற்றதாக இருந்ததால் என்னை நானே வெறுக்கிறேன். சில நட்புகள் தவறான தொடர்புகள் மற்றும் நான் எடுத்த தவறான முடிவுகள் என்னை குருடாக்கிவிட்டது. எது சரி, எது தவறு என்று தெரிந்தும் உண்மையை கவனிக்க நான் தவறிட்டேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.