For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சியில் விதிமீறல் - நீதிமன்றம் அதிரடி!

01:15 PM Apr 17, 2024 IST | Mari Thangam
மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சியில் விதிமீறல்   நீதிமன்றம் அதிரடி
Advertisement

மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சியில் விதிமுறைகள் மற்றும் ஆலோசனைகளை மீறுவதாகக் கண்டறியப்பட்டால், அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுவதை தவிர்க்க வேண்டும் என்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் அமைச்சகத்துக்கு கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதனை மோகன்லால் தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டது பார்வையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனைக் கண்டித்து வழக்கறிஞர் ஆதர்ஷ் என்பவர், கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில் கூறியதாவது, "மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பு விதிமுறைகள் மற்றும் மத்திய அரசின் ஆலோசனைகளை மீறி உடல் ரீதியான தாக்குதல் காட்சிகளை ஒளிபரப்பியுள்ளனர். அதனால் நிகழ்ச்சி ஒளிபரப்புவதை உடனடியாக நிறுத்த வேண்டும். சம்பந்தப்பட்ட காட்சிகளை அனைத்து சமூக ஊடகங்கள் மற்றும் ஒடிடி தளங்களில் இருந்து அகற்ற வேண்டும். வன்முறை அடங்கிய காட்சிகளை ஒளிபரப்புவது பார்வையாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். பொதுப் பாதுகாப்பு மற்றும் அறநெறிக்கு ஆபத்தை விளைவிக்கலாம்" என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், "போட்டியாளர்கள் தாக்கப்பட்ட சம்பவம் கவலையை ஏற்படுத்துகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பு விதிமுறைகள் மற்றும் ஆலோசனைகளை மீறுவதாகக் கண்டறியப்பட்டால், அதை ஒளிபரப்புவதை தவிர்க்க வேண்டும். உடனடியாக இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்" என்று உத்தரவில் தெரிவித்தது.

Tags :
Advertisement