முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

BIG BREAKING | தீபாவளிக்கு மறுநாளும் அரசு விடுமுறை..!! தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Tamil Nadu government has ordered to declare November 1st as a public holiday in view of Diwali festival.
12:49 PM Oct 19, 2024 IST | Chella
Advertisement

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 1ஆம் தேதியும் அரசு விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

Advertisement

தமிழ்நாடு மக்கள் அனைவரும் ஆவலுடன் தீபாவளி பண்டிகையை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்தாண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 31ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனால் மக்கள் ஜவுளி கடைகளிலும், பட்டாசு கடைகளுக்கும் படையெடுத்து வருகின்றனர். பொதுவாக தீபாவளி பண்டிகையை பொறுத்தவரை அன்று ஒரு தினம் மட்டுமே தான் அரசு விடுமுறை அறிவிக்கப்படும்.

ஆனால், தீபாவளிக்கு மறுநாள் விடுமுறையை, பொதுமக்களின் கோரிக்கை அடிப்படையில் தான் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசு அறிவித்து வருகிறது. இந்நிலையில் தான், தமிழ்நாடு அரசு தற்போது முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 1ஆம் தேதியும் அரசு விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகளுக்கு நவ.1ஆம் தேதி அரசு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊர் சென்று திரும்புவோருக்கு ஏதுவாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நவம்பர் 1ஆம் தேதி விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக நவம்பர் 9ஆம் தேதி பணிநாளாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : ’பசங்க’ படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் மனோன்மணி..!! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா..?

Tags :
Diwaliholidaytamilnadu govt
Advertisement
Next Article