BIG BREAKING | '85 வயதுக்கு மேற்பட்டவர்கள் வீட்டிலிருந்தே வாக்களிக்க ஏற்பாடு’..!! இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!!
85 வயதுக்கு மேற்பட்டவர்கள் விரும்பும் பட்சத்தில் வீட்டிலிருந்தே வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் பேசுகையில், இந்த ஆண்டில் நடைபெறும் மிக முக்கியமான செய்தியாளர் சந்திப்பு இதுதான். தேர்தல் திருவிழாவில் எங்களுடன் நீங்கள் பங்கெடுத்துக் கொள்ளுங்கள். மக்களவைத் தேர்தலை நடத்த முழு அளவில் தயாராக உள்ளோம். நடப்பு மக்களவை தேர்தலில் 96.8 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.
வாக்களிக்க ஏதுவாக 10.5 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும். 55 லட்சம் மின்னணு வாக்கு இயந்திரங்கள் தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ளன. தேர்தல் தொடர்பாக போலி செய்திகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். 1.82 கோடி வாக்காளர்கள் இந்த தேர்தலில் முதன்முறையாக வாக்களிக்க உள்ளனர். 82 லட்சம் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் உள்ளனர்.
இந்த தேர்தலில் ஆண் வாக்காளர்கள் 49.7 கோடி பேரும், பெண் வாக்காளர்கள் 47.1 கோடி பேரும் உள்ளனர். 100 வயது மேற்பட்ட 2.18 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் விரும்பும் பட்சத்தில் வீட்டிலிருந்தே வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
Read More : Lok Sabha | தபால் வாக்கு..!! வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..!! இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி..!!