For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Bharat rice: இனி ரயில் நிலையங்களிலும் பாரத் அரிசி கிடைக்கும்!.. ரயில்வே வாரியம்!

06:40 AM Mar 24, 2024 IST | 1newsnationuser3
bharat rice  இனி ரயில் நிலையங்களிலும் பாரத் அரிசி கிடைக்கும்    ரயில்வே வாரியம்
Advertisement

Bharat rice: மத்திய அரசின் பாரத் அரிசி மற்றும் கோதுமையை ரயில் நிலையங்களின் நுழைவு வாயிலில் விற்பனை செய்ய ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

மத்திய அரசின் பாரத் அரிசி மற்றும் கோதுமையை ரயில் நிலையங்களின் நுழைவு வாயிலில் விற்பனை செய்ய ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.

பாரத் அரிசி, கோதுமை மாவு, பாரத் பருப்பு போன்றவற்றை, மத்திய அரசு குறைந்த விலையில், பல்வேறு இடங்களில் வழங்கி வருகிறது. இந்நிலையில், ரயில் நிலையங்களிலும், பாரத் அரிசி, கோதுமை மாவு விற்பனை செய்ய ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை ரயில்வே வாரியத்தின் பயணியர் வர்த்தகப்பிரிவு தலைமை இயக்குனர் நீரஜ் சர்மா, கடந்த 15 ம் தேதி பிறப்பித்துள்ளார். விற்பனையை மத்திய அரசின் உணவு மற்றும் பொது வினியோக அமைச்சகம் மேற்கொள்கிறது.

முதற்கட்டமாக, அரிசி, கோதுமையை, சோதனை முறையில் விற்பனை செய்ய, மூன்று மாதங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்படி, கிலோ அரிசி 29 ரூபாய்க்கும், கிலோ கோதுமை 27.50 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும். பாரத் அரிசி, பாரத் ஆட்டா என்ற பெயரில் விற்பனை செய்யப்படும். ரயில் நிலையங்களில் இவற்றை விற்பதற்கு ஏற்ற இடங்களை, அந்தந்த கோட்ட மேலாளர் ஒப்புதலுடன் தேர்வு செய்ய வேண்டும், விற்பனை செய்ய வரும் வேன்களில் மட்டுமே விளம்பர பேனருக்கு அனுமதி தர வேண்டும்; விற்பனைக்கு மைக் செட் விளம்பரம் செய்ய அனுமதியில்லை போன்ற நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன.

மேலும், இந்த அரிசி, கோதுமை விற்பனைக்காக எந்த கட்டணமோ, விற்பனை வேன் நிறுத்துவதற்காக வழக்கமான பார்க்கிங் கட்டணமோ ரயில்வே துறை வசூலிக்காது என்றும், அந்த உத்தரவில் ரயில்வே வாரியம் கூறப்பட்டுள்ளது. பயணியர் நெரிசல் அதிகமாக உள்ள ரயில் நிலையங்களை தவிர்த்து, மற்ற ரயில் நிலையங்களின் நுழைவாயில் பகுதிகளில் வேன்களை நிறுத்தி விற்பனை செய்யப்பட உள்ளது. மாலை நேரத்தில் இரண்டு மணி நேரம், ரயில் நிலையங்களின் நுழைவுப் பகுதியில் இந்த விற்பனை நடைபெறும். ரயில் பயணியர் மற்றும் பொதுமக்கள் பயன் பெறும் நோக்கில் திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து, ரயில்வே அதிகாரிகளிடம் கேட்ட போது, 'சென்ட்ரல், எழும்பூர் போன்ற பயணியர் நெரிசல் மிக்க ரயில் நிலையங்களை தவிர மற்ற ரயில் நிலையங்களில், பாரத் அரிசி, கோதுமை மாவு போன்றவற்றை, மத்திய அரசின் உணவு மற்றும் பொது வினியோக அமைச்சகம் சார்பில் விற்க, ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது.

எந்தெந்த ரயில் நிலையங்களில் விற்பனை என்பது, இன்னும் முடிவு செய்யப்படவில்லை' என்றனர். டி.ஆர்.இ.யு., ரயில்வே தொழிற்சங்க தலைவர் மனோகரன் கூறுகையில், ''பெரிய நகரங்களில் அதிக பயணியர் வந்து செல்லும் ரயில் நிலையங்களில், இந்த திட்டத்திற்கு வரவேற்பு கிடைக்கும். இந்த விற்பனை திட்டம் தேர்தலை கருத்தில் கொண்டே அறிவிக்கப்பட்டதாக தெரிகிறது,'' என்றார்.

Readmore: இதுமட்டும் நடக்கக்கூடாது!… தமிழ்நாடு அடுத்த காஷ்மீராக மாறிவிடும்!… முதலமைச்சர் ஸ்டாலின் விளாசல்!

Tags :
Advertisement