For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

உஷார்!. இந்த மாத்திரைகளை சாப்படாதீர்கள்!. சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்தும் ஆபத்து அதிகம்!. நிபுணர்கள் எச்சரிக்கை!.

Beware!. Do not swallow these pills!. There is a high risk of kidney damage!. Experts warn!.
05:26 AM Jan 28, 2025 IST | Kokila
உஷார்   இந்த மாத்திரைகளை சாப்படாதீர்கள்   சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்தும் ஆபத்து அதிகம்   நிபுணர்கள் எச்சரிக்கை
Advertisement

Kidney damage: இன்றைய காலத்தில் கடுமையான உடல்வலி இருந்தாலோ அல்லது தலைவலித்தாலோ, காய்ச்சல் அடித்தாலோ அல்லது வருவது போன்ற அறிகுறிகள் தென்பட்டாலோ மருத்துவரிடம் செல்லாமல் மெடிக்கலுக்கு சென்று மாத்திரைகளை வாங்கி போட்டு கொள்ளும் பழக்கம் நம்மிடையே உள்ளது. இந்த நிலையில் சமீபத்திய ஆய்வு ஒன்று இந்த குறிப்பிட்ட சில மாத்திரைகளை எடுத்து கொள்வதால் ஏற்படும் கடும் பக்கவிளைவுகள் குறித்து வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. குறிப்பாக சிறுநீகர பாதிப்பை ஏற்படுத்துவதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

Advertisement

Non steroid anti inflammatory drugs என்று சொல்லப்படும் வலி நிவாரணிகளை குறைந்த காலம் பயன்படுத்தலாம். நம் உடலில் அடிப்பட்டு விட்டாலோ அல்லது வலி ஏற்பட்டாலோ இதை குறைந்த காலம் பயன்படுத்துவதில் தவறில்லை. ஆனால், சிலர் இதை மூட்டுவலி, முதுகுவலி போன்ற பிரச்னைகளுக்கு அதிகப்படியாக மாதக்கணக்கில் எடுத்துக் கொள்வார்கள். அவர்களுக்கு கட்டாயம் சிறுநீரக பாதிப்புகள் வர வாய்ப்புகள் உள்ளது.

எல்லா Antibiotics மருந்துகளும் சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. ஒருசில மருந்துகள் சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்தும். Vancomycin, Amikacin, Amino glycoside பேன்ற ஆன்டி பயாடிக்ஸ் மருந்துகளை அதிகம் எடுத்துக்கொள்வது பாதிப்பை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது. Acidityக்கு எடுத்துக்கொள்ளும் மருந்துகளில் இரண்டு வகையுள்ளது. H2 blocker, Ranitidine ஆகியவற்றை அதிகமாக எடுத்துக்கொள்வதால் பிரச்னையில்லை. இதுவே, Proton pump inhibitors என்று சொல்லப்படும் Pantoprazole, Omeprazole, Esomeprazole போன்ற மாத்திரைகளை கணக்கில்லாமல் அதிக காலம் எடுத்துக் கொண்டால் அதற்கு சிறுநீரகத்தை பாதிக்கும்.

கேன்சர் சிகிச்சைக்காக இந்த Antimetabolites மருந்துகளை அதிகளவில் எடுத்துக்கொண்டால் கிட்னியை செயலிழக்க வைக்கும் வாய்ப்புகள் இருக்கிறது. சில வகையான BP மருந்துகள் Diuretic medicines, ACE Inhibitors இவை எல்லோருக்கும் சிறுநீர் பாதிப்பை ஏற்படுத்தாது. இருப்பினும், BP மாத்திரைகளை மருத்துவர்கள் பரிந்துரையில்லாமல் எடுக்கக் கூடாது. அதுமட்டுமில்லாமல் மனநலப் பிரச்னை, மன அழுத்தம் போன்ற பிரச்னைகளுக்கு கொடுக்கப்படும் மருந்துகளுக்கு Rhabdomyolysis என்னும் தசைப்பிரச்னையை ஏற்படுத்தி அதனால் கிட்னி செயலிழக்க வாய்ப்பு உள்ளதால், இதுபோன்ற மருந்துகளை சுயமாக வாங்கிப் பயன்படுத்தக் கூடாது.

Readmore: முதுகு வலிக்கு இனி குட் பாய் சொல்லுங்க..!! இந்த ஒரு இலை போதும்..!! நிரந்த தீர்வு..!! டிரை பண்ணி பாருங்க..!!

Tags :
Advertisement