உஷாரய்யா உஷார்..!! தமிழ்நாடு CM பெயரில் உலா வரும் மெசேஜ்..!! தொட்டால் காலி..!! எச்சரிக்கும் சைபர் கிரைம்..!!
நாடு முழுவதும் செல்போன் சேவை கட்டணத்தை கடந்த ஜூலை மாதம் அதிரடியாக உயர்த்தப்பட்டது. செல்போன் சேவை கட்டண உயர்வைப் பொறுத்தவரை எப்போதும் முதலில் ஒரு நிறுவனம் உயர்த்தினால் அடுத்தடுத்து உள்ள நிறுவனங்களும் உயர்த்திவிடும். அந்தவகையில் ஜியோவை தொடர்ந்து ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களும் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தின. இதனால், செல்போன் பயனர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், வாடிக்கையாளர்களுக்கு ஆசை காட்டி, மோசடி செய்யும் கும்பல் ஆஃபர் எனக் கூறி அப்பாவி மக்களை குறி வைத்து களமிறங்கி உள்ளது.
அந்த வகையில், தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் பெயரில் ஒரு குறுஞ்செய்தி சமூக வலைதளங்களில் வட்டமடித்து வருகிறது. 'புத்தாண்டு ரீசார்ஜ் சலுகை' என்ற தலைப்புடன், 'புத்தாண்டையொட்டி முதல்வர் ஸ்டாலின் அனைவருக்கும் 2 மாத ரீசார்ஜ், 749 ரூபாய் முற்றிலும் இலவசம் எனக் குறிப்பிட்டு ஒரு லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த லிங்கை கிளிக் செய்தால், நமது தகவல்கள் திருடப்படும் அபாயம் உள்ளது. அதோடு, பணப் பரிவர்த்தனை மூலமாக நமது வங்கிக் கணக்கில் உள்ள பணம் திருடப்படவும் வாய்ப்புள்ளது.
இதுபோன்ற லிங்க்கை க்ளிக் செய்து உள்ளே நுழைந்தால், அந்த மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கில் இருந்து பணம் பறிபோகும் அபாயம் உள்ளது. இதனால், அத்தகைய விளம்பரங்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம். கவனமுடன் இருக்க வேண்டும் என்றும் சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.