100% ரிசல்ட்.. துணியில் படிந்த சாயத்தை போக்க, இதை விட சுலபமான வழி கிடையாது!!!
பள்ளிக்கு செல்லும் பிள்ளைகளின் அம்மக்களுக்கு மட்டும் தான் தெரியும், துணியில் உள்ள கறையை போக்குவது எவ்வளவு கடினம் என்று. துணியில் படிந்த கரையை தேய்த்து கையே ஓய்ந்துபோய் விடும். அதிக கறை இருந்தால் வாஷிங் மிஷினிலும் போட முடியாது. இதனால் பல தாய்மார்கள் பெரும் அவதிப்படுவது உண்டு. ஆனால் இதற்க்கு சுலபமான தீர்வு உண்டு. இதற்க்கு நீங்கள், அரை பக்கெட் தண்ணீரில் சிறிதளவு சமையல் சோடாவை கலந்து கொள்ளவும். அதில் கறைப்படிந்த துணிகளை ஊறவைத்து ஒரு மணி நேரம் கழித்து துவைக்கவும். உங்களுக்கு கறை இருந்த இடமே தெரியாது.
ஒரு சில நேரத்தில், வாஷிங் மிஷினில் துணி துவைக்கும் போது வெள்ளைத் துணியுடன் மற்ற துணியின் சாயம் ஒட்டிக் கொள்ளும் அவற்றை போக்குவதும் கடினமான ஒன்று. ஆனால் இனி கவலை பட வேண்டாம். இது போன்ற கடினமான கரைகளை சுலபமாக போக்க எளிய வழி ஒன்று உள்ளது. இதற்க்கு முதலில் ஒரு பெரிய பாத்திரத்தை எடுத்து, அது முழுவதும் தண்ணீர் நிரப்பிக் கொள்ளுங்கள். இப்போது அதில், சாயம் பட்ட துணியை போட்டு, அந்த பாத்திரத்தை அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க விட வேண்டும்.
சுமார் 2 முதல் 5 நிமிடங்கள் பிறகு, அந்த துணியை மட்டும் எடுத்து சாதாரண குளிர்ந்த நீரில் அலசி, வழக்கம் போல் நன்றாக பிழிந்து, வெயிலில் காய வைக்க வேண்டும். இப்படி 2 அல்லது 3 முறை செய்தால் துணியில் ஒட்டியிருக்கும் சாயம் நீங்கி விடும். இதற்க்கு பதில், நீங்கள் பாத்ரூம் சுத்தம் செய்ய பயன்படுத்தும் ஹார்பிக் பயன்படுத்தாலம். இதற்க்கு நீங்கள், கறை உள்ள இடத்தில ஹார்பிக் ஊற்றிக் கொள்ள வேண்டும். இப்போது ஒரு பிரஷ் எடுத்து, கறையின் மீது ஊற்றி இருக்கும் ஹார்பிக்கை நன்றாக தேய்த்து, அதன் பின்னர், தண்ணீரில் கழுவி எடுத்தால் கறை இருந்த தடம் தெரியாமல் போய்விடும்.
Read more: எமனாக மாறும் கொலஸ்ட்ரால்!! மருந்தே இல்லாமல் குறைக்க, சிறந்த வழி இது தான்..