இனி எந்த வைரஸ் பரவினாலும் பயம் வேண்டாம், இந்த தேநீரை தினமும் குடித்தால் போதும்.. டாக்டர் சிவராமன் அட்வைஸ்..
கோவிட் பாதிப்பிற்கு பிறகு, காய்ச்சல் வந்தாலே பலருக்கு பயம் ஏற்படுகிறது. என்றாலும் பலருக்கும் அச்சம் வந்துவிடுகிறது. இந்நிலையில், தற்போது எச்.எம்.பி.வி. என்னும் கொடிய தொற்று இந்தியாவிலும் பரவி வருகிறது. ஹியூமன் மெட்டாப் நியூமோ வைரஸ் (எச்எம்பிவி) தொற்று தொடர்பாக இந்தியாவில் ஜனவரி 7 ஆம் தேதி வரை எட்டு தொற்றுகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மனிதர்களின் வாழ்க்கை மற்றும் உணவுமுறை மாற்றத்தால், மனிதர்களின் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து விடுகிறது.
இந்நிலையில், இது போன்ற கொடிய வைரஸில் இருந்து நம்மை பாதுகாக்க நமது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும். அந்த வகையில், மருத்துவர் சிவராமன் மருத்துவ பொடி ஒன்றை பரிந்துரைத்துள்ளார். அந்த பொடியை தினமும் தேநீராகக் குடித்து வந்தால் வைரஸ் காய்ச்சல் வராது என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறும்போது, தேநீரில் பால் கலந்து குடிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றார். அது மட்டும் இல்லாமல், பால் மற்றும் சர்க்கரை சேர்க்காமல் தேயிலை தேநீரைக் குடிப்பதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.
மேலும், தேகராஜன் என்று சித்த மருத்துவத்தில் அழைக்கப்படும் கரிசாலை பொடியை தேநீராகக் குடித்தால் வைரஸ் காய்ச்சல் வராமல் தடுப்பது மட்டும் இல்லாமல், கபத்தை முற்றிலும் முறிக்கும் என்றார். இதற்க்கு பதில், நெல்லிக்காய் பொடி, சுக்குப் பொடி, ஆவாரைப் பொடி, புதினா பொடி ஆகியவற்றை தேநீராகக் குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, வைரஸ் நோய்கள் ஏற்படாமல் தடுக்க முடியும் என்று கூறியுள்ளார்..
Read more: உங்கள் தொப்பையை குறைக்க இதை விட சிறந்த வழி கிடையாது!!!