நைட் ஷிப்ட் பார்ப்பவரா நீங்கள்? அப்போ உங்களுக்கான snacks இது தான்..
இரவில் என்ன தான் வயிறு நிறைய சாப்பிட்டாலும், தூங்க செல்வதற்கு முன் ஏதாவது ஒன்றை சாப்பிடாமல் சிலரால் தூங்க முடியாது. மேலும் சிலர் சீக்கிரம் சாப்பிடுவதால் நேரம் ஆக ஆக அதிகம் பசி ஏற்படும். குறிப்பாக நைட் ஷிப்ட் பார்க்கும் பலருக்கு இந்த பிரச்சனை இருக்கம். ஆனால், இரவில் சாப்பிட்டால் உடல் நலத்தை பாதிக்குமோ என்ற அச்சமும் இருக்கும். இனி நீங்கள் கவலை பட வேண்டாம்.. இரவு 10 மணிக்கு மேல் உட்கொண்டாலும் பிரச்சனைகள் உண்டாக்காத சில ஆரோக்கிய Snacks வகைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..
ஒரு கப் அளவு Cottage Cheese Ice Cream-ல் 23g புரதம் உள்ளது. அதே சமயம், குறைந்தளவு கலோரிகள் கொண்ட இந்த Ice Cream, இரவு உணவு உட்கொள்ளலால் உண்டாகும் உடல் பருமன், BP போன்ற பிரச்சனைகளை தடுக்கிறது.
சர்க்கரைவள்ளி கிழங்கு பயன்படுத்தி தயார் செய்யப்படும் Wedges, எண்ணற்ற ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது. இதனால் இந்த Wedges, இரவு நேர பசியை போக்கும் சிறந்த ஆரோக்கியமான உணவு ஆகும்.
பழங்களை விரும்பி சாப்பிடுபவர்கள், குறைந்தளவு கலோரிகள் மற்றும் போதுமான அளவு நார்ச்சத்து நிறைந்து காணப்படும் கிவி பழத்தை சாப்பிடலாம்.
பலருக்கு மிகவும் பிடித்த, புரதம், நார்ச்சத்து நிறைந்த வறுத்த கொண்டைக்கடலை ஒரு சிறந்த தேர்வு. வறுத்த கொண்டைக்கடலை சீரான குடல் இயக்கத்திற்கு உதவுவது மட்டும் இல்லாமல், இதில் காணப்படும் மெக்னீசியம் மற்றும் பல மினரல்கள், சீரான இரத்த ஓட்டத்தை உறுதி செய்து, நிம்மதியான உறக்கத்திற்கு உதவும்.
பூசணி விதையில், மெக்னீசியம், பொட்டாசியம், டிரிப்டோபன் போன்ற பல சத்துக்கள் உள்ளது. இரவு நேர பசியை போக்க இது ஒரு சிறந்த தேர்வு..