For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மருந்து மாத்திரைகளை விட, மூட்டு வலிக்கு சிறந்த வலி நிவராணி இது தான்!! கட்டாயம் தெரிந்துக் கொள்ளுங்கள்...

best remedy for knee pain other than medicines
07:04 AM Jan 04, 2025 IST | Saranya
மருந்து மாத்திரைகளை விட  மூட்டு வலிக்கு சிறந்த வலி நிவராணி இது தான்   கட்டாயம் தெரிந்துக் கொள்ளுங்கள்
Advertisement

நடைபயிற்சி செய்வது மிகவும் நல்லது. நடைபயிற்சி செய்வதால் நமது ஆயுசு நாட்கள் நீடிக்கும் என்று மருத்துவர்கள் பரிந்துரைப்பது உண்டு. ஆனால் மூட்டு வலி இருக்கும் ஒரு சிலர், நாங்கள் நடந்தால் மூட்டு தேய்மானம் ஏற்படுமா? அல்லது மூட்டு தேய்மானம் இருக்கும் போது நாங்கள் நடக்கலாமா என்ற சந்தேகத்தோடு இருப்பது உண்டு. பெரும்பாலும் மூட்டு வலி உள்ளதால் நாங்கள் நடக்கவில்லை என்று காரணம் சொல்பவர்கள் அநேகர். ஆனால் உண்மை என்னவென்றால், நடக்காமல் இருந்தால் மூட்டுகளில் உள்ள திரவம் மேலும் குறைந்து பிரச்சனை இன்னும் அதிகமாகும்.

Advertisement

நாம் நடக்க நடக்க தான், மூட்டுகளின் உட்பகுதி தூண்டப்பட்டு திரவம் சுரந்து, தசைகள் வலிமை அடையும். இதனால் தினமும் நடை பயிற்சி செய்வது உங்கள் மூட்டுகளுக்கு நல்லது. இதுவரை நடை பயிற்சி செய்யாதவர்கள் உடனே பல மணி நேரம் நடக்க கூடாது. நடைபயிற்சி செய்ய ஆரம்பிக்கும் போது, நிதானமாக 15 நிமிடங்கள் நடந்தால் போதும். பின்னர்,நாளுக்கு நாள் உங்களால் முடிந்த வரை நேரத்தை அதிகரிக்கலாம். ஆஸ்ட்டியோ ஆர்த்ரைடிஸ்ஸை பொறுத்தவரை 90% சதவீதம் பேருக்கு வலி நிவாரணி நடைபயிற்சி தான்.

Read more: குழந்தைகள் முதல் சுகர் பேஷண்ட் வரை, கட்டாயம் இந்த சப்பாத்தியை சாப்பிட வேண்டும்!! டாக்டர் அட்வைஸ்..

Tags :
Advertisement