சிறுநீரக பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு வேண்டுமா? அப்போ இந்த கீரையை வாரம் 2 முறை சாப்பிடுங்க..
குளிர் காலம் என்றாலே சளி நம்மை பாடாய் படுத்தி விடும். இதனால் நமது அன்றாட வேலைகளே பாதிக்கப்படும். இதற்காக பலர் மெடிக்களிலும், மருத்துவமனைகளிலும் மாத்திரை வாங்கி சாப்பிடுவது உண்டு. ஆனால் அது முற்றிலும் தவறு. இது போன்ற மாத்திரைகள் வாங்கி சாப்பிடுவதால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றது. இதனால் நீங்கள் முடிந்த வரை வீட்டு வைத்தியங்களை பின்பற்றுவது தான் சிறந்தது.
அந்த வகையில், மூக்கிரட்டை கீரையை பற்றி நீங்கள் கட்டாயம் தெரிந்துக்கொள்ள வேண்டும். ஆம், இந்த கீரையை நீங்கள் காசு கொடுத்து வாங்க தேவை இல்லை. சாலை ஓரம் கிடைக்கும் இந்த கீரையை, நமது முன்னோர்கள் வாரம் 1 அல்லது 2 முறை சாப்பிட்டு வந்தார்கள். உடலின் முக்கிய பகுதிகளான இதயம், நுரையீரல், கல்லீரல், கிட்னி ஆகியவற்றை பலப்படுத்துவதில், மூக்கிரட்டை கீரை பெரும் பங்கு வகிக்கிறது. அது மட்டும் இல்லாமல், நெஞ்சு சளி, கபத்தை வெளியேற்ற மூக்கிரட்டை கீரையை விட சிறந்த மருந்து கிடையாது.
மேலும், வாத நோய்களை குணப்படுத்த இந்த கீரை பெரிதும் உதவும். அது மட்டும் இல்லாமல், சிறுநீர் செயலிழப்பு, சிறுநீர் கல், தொற்று ஆகிய பிரச்சனைகளையும் இந்த கீரை குணப்படுத்துகிறது. குறிப்பாக, சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள், வேறு எந்த மருந்துகளும் பயன்படுத்தாமல் இந்த கீரையை தனியாக எடுக்க வேண்டும். மேலும், சித்த மருத்துவரின் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்று சித்த மருத்துவர் கற்பகம் கூறியுள்ளார்.
Read more: இந்த 5 எண்ணெய்களை சமையலில் பயன்படுத்தாதீங்க.. உயிருக்கே ஆபத்து…! – நிபுணர்கள் எச்சரிக்கை