வெண்புள்ளிகள் இருந்த இடம் தெரியாமல் மறைய, இதை விட சிறந்த மருந்து கிடையாது..
மனிதனுக்கு ஏற்படும் மோசமான பாதிப்புகளில் ஒன்று என்றால் அது வெண்புள்ளி தான். உலக மக்கள் தொகையில் 1-2 சதவிகிதம் பேருக்கு வெண்புள்ளி பாதிப்பு உள்ளது. வெண்புள்ளியால் உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது என்றாலும், மன அளவில் பலர் பாதிக்கப்படுகின்றனர். வெளியே சென்றால் யாராவது தங்களை பார்த்து சிரித்து விடுவார்கள் என்ற அச்சம் பலருக்கு இருக்கும். மேலும், இந்த பாதிப்பு உள்ளவர்களின் அருகில் சென்றால் தங்களுக்கு பரவி விடும் என்ற அச்சத்தில், பலர் அவர்களை விட்டு விலகி செல்வார்கள்.
இதனால் அவர்கள் மனதளவில் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால் உண்மையில், வெண்புள்ளி ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குப் பரவாது. இது நிறமிக் குறைபாட்டால் ஏற்படுகிறது. ஆம், தோல் அதன் நிறமி செல்களை (மெலனோசைட்டுகள்) இழக்கும் போது தான் இந்த வெண்புள்ளிகள் ஏற்படுகிறது. இது ஒரு தொற்று அல்லது பரம்பரை நோய் கிடையாது. இந்த பிரச்சனை எந்த வயதிலும் ஏற்படலாம். இந்தப் பிரச்சனையால் நீங்களும் கவலையில் இருக்குறீர்களா? இனி கவலை வேண்டாம். வீட்டில் இருக்கும் பொருள்களை வைத்து எப்படி வெண்புள்ளிகளை குணமாக்கலாம் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்..
இதற்கு முதலில், ஒரு கைப்பிடி துளசி இலைகளை நன்கு சுத்தம் செய்து கொள்ளுங்கள். பிறகு அந்த இலைகளை, பேஸ்ட் பதத்திற்கு சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ளுங்கள். இப்போது தோல் நீக்கிய நான்கு வெள்ளைப்பூண்டு பற்களை, பேஸ்ட் பதத்திற்கு அரைத்துவிடுங்கள். இப்போது அரைத்து வைத்திருக்கும் துளசி மற்றும் பூண்டு விழுதுகளை ஒன்றாக சேர்த்து நன்கு கலக்கிவிடுங்கள். இப்போது அந்த கலவையில் கால் தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்துவிடுங்கள்..
இப்போது இந்த பேஸ்ட்டை, தேமல், வெண் புள்ளிகள் இருக்கும் இடத்தில் தேய்த்து, நன்கு உலர்ந்த பிறகு குளியுங்கள். தொடர்ந்து ஒரு மாதம் இப்படி செய்வதால், தோல் சம்மந்தபட்ட பிரச்சனைகள் அனைத்தும் மறைந்து விடும்.